பல்லவி
இரட்சணிய சேனை வீரரே நாம்
எல்லோரும் கூடுவோம்!
அனுபல்லவி
பட்சமுடன் தேவன் தமக்குச் செய்த
நன்மையைக் கொண்டாட
சரணங்கள்
1. பட்சிகள், விலங்கு, ஊர்வன ஜீவன்கள்
பசியாறிப் பிழைக்க,
பசுமையாகப் புற்பூண்டு விருட்சங்கள்,
பார் தழைத் தோங்கியதே - இரட்சணிய
2. விதைத்த விதைகள் முளைக்க மழையை
மிதமாக பொழிந்து,
விந்தையாகப் பயிர் ஏற்ற காலத்தில்
விளையச் செய்தாரே - இரட்சணிய
3. ஒற்றைத் தானியம் ஓங்கி வளர்ந்து,
ஒன்பது நூறாக
வர்த்தனை யாக்கியன வல்லமைத் தேவனை
வாழ்த்திப் புகழ்ந்திடுவோம் - இரட்சணிய
4. அழுகையோடு நாம் நிலத்தை விதைத்து
அநேக நாள் உழைத்து
அறுத்துப் போர்தனை அடித்துப் புசித்து
ஆனந்தம் கொண்டோமே - இரட்சணிய
5. தானியம் பண்டகசாலையிற் சேரும்
தகைமையைப் போல
வானவரறுப்பில் மாளிகை சேரும்
மணிகள் போலிருப்போம் - இரட்சணிய
No comments:
Post a Comment