Sunday, November 27, 2011

பாடல் 176: வாரும் சிலுவையடியிலே


    இராகம்: நாதநாமக்கிரியை தாளம்: ஆதி

    பல்லவி

    வாரும் சிலுவையடியிலே - வந்தண்ணலேசை
    பாரும் துயர் நீங்கிடவே

    அனுபல்லவி

    பூரண இரட்சையடைந்து புண்ணியன் கிருபை பெற்று
    தாரணியிலும் மகிழ்ந்து வாழ அவரில் ஜீவித்து 

    சரணங்கள்

1. இம்மைச்செல்வம் அற்பமென்றெண்ணி - அவர் விலாவில்
    விம்மிப்பாயும் இரத்தத்தில் மூழ்கி
    செம்மையாய்க் கழுவப்பட்டு சீர்முழு இரட்சையைப் பெற்று
    உண்மையா யவருந்தனின் உள்ளத்தில் வாழ்ந்திட வென்று - வாரும்
   
2. ஜீவ ஊற்றில் வந்து மூழ்கிடும் - அப்போதும் உள்ளம்
    பாவ மற்று சுத்தி பெற்றிடும்
    தேவசுதன் திரு இரத்தம் மூழ்க முழு இரட்சைவரும்
    ஆவலோடு அவரை நீர் தேடி இதோ வந்துவிடும்! - வாரும்

3. சேரும் இரட்சண்யப் படையிலே - தைரிய மடைய
    வாரும் யுத்த முன்னணியிலே!
    ஜீவித்திடும் வெளிச்சத்தில் சுத்தி நீர் ஆசிப்பீராகில்
    கூவியவரைக் கெஞ்சும் பூர்ண இரட்சை வேண்டுமாகில் - வாரும்

4. பரிசுத்தம் வேண்டுமாகில் நீர் - பாரச் சிலுவை
    பற்றி அதை விட்டிடாதேயும்
    பூலோக ஐசுவரியம் பூவைப்போல் வாடிடுமென்று
    மேலவன் பாதத்தைத் தேடும்; மேன்மை சுத்திதனை நாடும்! - வாரும்

பாடல் 177: நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம்


    இராகம்: துதிப்பேன் துதிப்பேன் தாளம்: ஏகம்

    பல்லவி

    நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம் - உம்மை அன்பாய் தேடி
    இன்பமா யழைத்துக் கூறுகிறாராம்

    அனுபல்லவி

    வந்தா லென் கிருபை முற்றுமே நான் தந்து
    சொந்த மாக்குவேன் முழு இரட்சை ஈந்தென்று

    சரணங்கள்

1. ஒப்புவித்திடும் உமையவருக் கென்றே அவர் வழியை விட்டு நீர்
    தப்பிப்போகாமல் தாங்கிக்கொள்ளுமென்றே!
    அப்பா உன் சித்தம் ஆகக்கடவதென்று
    செப்பினால் முற்றுஞ் செய்வாரே நன்று! - நம்பும்

2. பாவ மகற்றி மா பெந்தம் அறுத்தாரென்றும் - இயேசு நாதனுமக்கு
    ஜீவ ஒளியும் கேடகமுமா மென்றும்
    தேவ கிருபையைத் தீயோன் பெற்றேனென்றும்
    ஆவலாய் இரட்சண்யத் தூதைக் கூறுவீரே - நம்பும்
                                                                           K.S Abraham   

பாடல் 178: தூயனாய் நீ வாழ


    Take Time to be holy - 458

1. தூயனாய் நீ வாழ கர்த்தரிடம் கேள்;
    அவருடன் சேர்ந்து வேதத்தைப்படி
    சான்றோருடன் ஒன்றாய் ஏழையைத் தாங்கு;
    யாவையும் மறந்து தேவ ஆசீர் தேடு

2. தூயனாய் நீ வாழ லோகத்தைத் தள்ளு;
    இயேசுவோடிருந்து தனி தியானம் செய்;
    இயேசை நோக்கிப்பார்த்தால் அவர்போல் ஆவாய்;
    அவர்தம் அழகைக்காண்பார் நண்பர் உன்னில்

3. தூயனாய் நீ வாழ தேவனைத் தேடு;
    என்ன நேரிட்டாலும் அவரைப் பின்செல்
    துன்ப துக்கமேனும் இன்னும் அவர்பின்செல்;
    இயேசுவை நோக்கி அவர் வாக்கை நம்பு

4. தூயனாய் நீ வாழ சாந்தமாயிரு;
    எண்ணம் நோக்கமெல்லாம் அவர் ஆளட்டும்;
    அன்பின் ஊற்றருகே அவர் நடத்துவார்;
    மேலோக சேவைக்காய் ஆக்கிடுவாரே
                                          William D.Longstaff

Saturday, November 26, 2011

பாடல் 179: இயேசு அருள் நாதனே


    மெட்டு: தேவா! ஜெயவல்லவா

    பல்லவி

    இயேசு அருள் நாதனே!
    தாசன் மேலுன்னாவி யூற்றத் தாள் பணிந்தேனே!

    கண்ணிகள் 

1. மாசற்ற உம் இரத்தத்தாலென் மனம் சுத்திசெய்யுமேன்!
    நேசரே உம் நிஜரூபம் நேரில் காணச் செய்யுமேன்!
    நீசன் மனம் மாறினதால் பாசமென்னில் கூருமேன்! - இயேசு

2. உம்மோடு சிலுவையி லொன்றாயறையப்பட்டேனே!
    இம்மையிலுமைப் பிரிந்து இருக்கவுமாட்டேனே!
    தம்மையல்லாமல் ஒன்று மிந்தத் தாரணியில் வேண்டேனே! - இயேசு

3. தணிந்திடாத் தாகமெனில் தாமெழுப்பி வையீரோ?
    பணிந்த என்னுள்ளத்தில் நீர் வந்து பள்ளி கொள்ளீரோ
    துணிந்து வந்த என்னோடு தூயா வாசஞ் செய்யீரோ? - இயேசு

4. எனது சித்த மனைத்தும் உமதாயிருக்கட்டும்!
    தமது ஒளியில் நானும் வெளிச்சமே காணட்டும்!
    தினம் பரிசுத்தனாக உமைத் துதி செய்யட்டும்! - இயேசு   

பாடல் 180: தாரும் தேவா உந்தன்


    Jesus, Thy fullness give - 431
               (Tune 172 of ESB)

1. தாரும் தேவா உந்தன்
    பூரண இரட்சிப்பு
    காரும் என் ஆத்மா தேகமும்
    மாறாது சுத்தமாய்

    பல்லவி

    தூய ஆடை நான் தரித்து
    நேயரோடுலாவுதற்கு
    ஆக்கு தவர் இரத்தம்

2. பூரண இரட்சிப்பின்
    தீரம் எனக்கீயும்
    தீங் ககற்றி நன்மை செய்ய
    தாங்கிடும் வல்லவா! - தூய

3. அன்பு சமாதானம்
    உன்னத ஆறுதல்
    கல்வாரி ஜீவன் ஆவியும்
    என் பங்காகச் செய்யும்! - தூய

4. முற்றாய்ப் பாவம் விட்டு
    வற்றா கிருபை கொண்டு
    புறம் அகம் யாவும் உம்மைப் போல்
    கறை யற்றிருப்பேன்! - தூய
                                            William Pearson

பாடல் 181: உம்முன் நிற்க தேவே!


    Before Thy face, dear Lord - 409
                           (Tune 169 of ESB)

1. உம்முன் நிற்க தேவே!
    எந் நிலை காட்டுமேன்!
    நான் பாடிடும் எக் கேள்விக்கும்
    விடை யளிப்பேனே

    பல்லவி

    கெஞ்சும் வேளையில் உம் கிருபையால்
    நெஞ்சின் குறை யாவையும் நேரில் காட்டும் மீட்பா!

2. முன் போல் நானிப்போதும்
    சன்மார்க்க ஜீவியா?
    உம் ஆவி நிறைந்தவனாய்
    பின்பற்றி வாறேனா? - கெஞ்சும்

3. எண்ணம் செய்கையிலும்
    என்னுள்ளம் சுத்தமா?
    எந்த நாளும் என் இரட்சிப்பை
    நான் காத்துக் கொண்டேனா? - கெஞ்சும்

4. முன்னுள்ள வைராக்கியம்
    இந்நாளிலுமுண்டா?
    உம் ஊழியத்தில் இன்னும் நான்
    இன்பம் காண்கிறேனா?  - கெஞ்சும்

5. துன்பமில்லா இடம்
    தேடி நான் செல்வேனா?
    வன் போர்தனில் நிலையாது
    மாறுபவன் நானா? - கெஞ்சும்
                                     Herbert H Booth

பாடல் 182: சிலுவையில் சேருவேன்


    I am coming to the Cross
        (Tune 159 or 615 of ESB)

1. சிலுவையில் சேருவேன்
    ஏழை ஈனன் குருடன்
    லோகம் குப்பை என்கிறேன்
    பூர்ண மீட்பு பெறுவேன்

    பல்லவி

    கர்த்தா! உம்மை நம்புவேன்
    கல்வாரி பலியே நீர்!
    சிலுவை யண்டை தாழ்வேன்
    இப்போ இயேசே இரட்சிப்பீர்!

2. நெடும் வாஞ்சை உமக்காய்
    ஆயின் ஆண்டது தீமை
    இயேசு சொல்வார் இன்பமாய்
    தீர்ப்பேன் முற்றாய் பாவத்தை - கர்த்தா

3. முற்றுமாய் படைக்கிறேன்
    அன்பர் ஆஸ்தி சமயம்
    ஆத்மா தேகம் அனைத்தும்
    உமக்கே என்றைக்குமாய் - கர்த்தா

4. வாக்குத்தத்தம் நம்புவேன்
    உணர்வேன் திரு இரத்தம்
    மண்ணில் தாழ்ந்து விழுவேன்
    அறையுண்டேன் கிறிஸ்தோடும் - கர்த்தா

5. சேர்வார் ஆத்மா நிறையும்!
    அவரே என் பூரிப்பு
    அடைந்தேன் சொஸ்தம் முற்றும்
    ஆட்டுக் குட்டிக்கு மாண்பு! - கர்த்தா
                                      William McDonald

Friday, November 25, 2011

பாடல் 183: வாழ் நாள் ஜீவன் ஓடுதே


    Jesus see me at thy feet - 292
                   (Tune 329 of ESB)

1. வாழ் நாள் ஜீவன் ஓடுதே
    இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்
    அங்க மேனி வாடுதே
    இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்

    பல்லவி

    ஆம்! ஆம்! தேவ சுதனே!
    பாவம் போக்க மாண்டீர்!
    பாவம் போக்கும் இரட்சகா
    இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்!

2. வீண் பக்தனாய் அலைந்தேன்
    இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்!
    நாவினால் தான் பூசித்தேன்
    இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! - ஆம்

3. மனம் மாற்ற வல்லவா!
    இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்!
    என் உள்ளத்தை வெல்பவா!
    இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! -
ம்

பாடல் 184: வாரும் தேவா! வாரும்


    Come in, My Lord, come in - 562
                           (Tune 182 of ESB)

1. வாரும் தேவா! வாரும்
    உள்ளம் உம் வீடாகும்!
    என்னாத்தும பாவம் நீக்கும்
    என்னுடன் தங்கிடும்
    கருணைக் கடலே!
    இம்மைச் செல்வம் குப்பை!
    ஆனால் நீரே நிலைப்பவர்!
    உம்மையே தந்திடும்!

2. வாரும் தேவா வாரும்
    உம் பலம் காட்டிடும்!
    பாவம் போக்கி சுத்தமாக்கும்!
    இப்போ விடுவியும்!
    நல் வாக்குத் தந்தீரே!
    நம்பினேன் கைதூக்கும்!
    வல்ல இம்மானுவேலரே
    உம்மிலென் நம்பிக்கை

3. தேவா! எனில் வந்தீர்
    உணர்ந்தேன் நான் அதை!
    உன் குறை நீக்கினேன் என்ற
    உம் சத்தம் கேட்கிறேன்!
    உமக்கே மகிமை!
    வான் புவி கூறட்டும்!
    உயிர்த்தெழுந்த நேசர் நீர்
    என்னில் வசிக்கிறீர்!
                                Bramwell Booth

Thursday, November 24, 2011

பாடல் 185: என் மீட்பர் இரத்தம் சிந்தினார்


    My hope is built on nothing less
             (Tune: Solid rock - 501 of ESB)

1. என் மீட்பர் இரத்தம் சிந்தினார்
    மா நீதியும் சம்பாதித்தார்
    என் சொந்த நீதி வெறுத்தேன்
    இயேசுவின் நாமம் நம்புவேன்
    நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்
    வேறஸ்திபாரம் மணல் தான்

2. கார் மேகம் அவர் முகத்தை
    மறைக்கும் காலம் அவரை
    எப்போதும் போல நம்புவேன்
    மாறாதவர் என்றறிவேன்
    நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்
    வேறஸ்திபாரம் மணல் தான்

3. மரணம் வெள்ளம் பொங்கினும்
    என் மாம்சம் சோர்ந்து போயினும்
    உம் வாக்குத் தத்தம் ஆணையும்
    என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்
    நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்
    வேறஸ்திபாரம் மணல் தான்

4. நியாயத் தீர்ப்புக் காலத்தில்
    எக்காளச் சத்தம் கேட்கையில்
    அஞ்சேன் என் மீட்பர் நீதியே
    அநீதன் என்னை மூடுமே
    நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்
    வேறஸ்திபாரம் மணல் தான்

பாடல் 186: உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன்


    Tell me what to do to be pure - 459
                     (Tune 858 of ESB)

1. உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன்
    சுத்தமாய் ஜீவிப்ப தெப்படி?
    உள் வினையைப் போக்கத் தேடும் நான்
    விடுதலை பெறல் எப்படி?
    தீவினை என்னுள்ளிருப்பதால்
    சிற்றின்பம் மதி மயக்குதே
    தெய்வமே! உம் வல்லமையால்
    அருள் புரியாயோ அப்பனே!

    பல்லவி

    பாலிலும் வெண்மை! வெண்மையாக்குமேன்
    பாலிலும் வெண்மையாக்குமேன்
    என் உள்ளம் மீட்பர் இரத்தத்தால்

2. இரட்சகா! கிட்டி சேரீரோ?
    அடியேன் குற்றத்தைக் காட்டிட!
    ஏழை என் ஜெபம் கேளீரோ?
    இப்போதே என் உள்ளத்தை மாற்ற!
    ஓர் போதும் மாறாத தேவனே!
    என்றும் உந்தன் சக்தி குன்றாதே!
    ஏழையின் ஜெபத்தைக் கேட்பீரே
    நான் உணர அருள் ஈவீரே! - பாலிலும்

3. உம்மை எனக்கு காட்டுமேன்
    ஒருபோதும் நான் கண்டதில்லையே
    என்னில் வாசம் செய்றீர் - உம்மில்
    ஐக்கியம் கொள்கிறேன் நான்
    புன்முறுவல் என்னில் நிச்சயம்
    உம் அன்பை அறிந்து கொண்டேனே
    உம் முகத்தை காண்கிறேன் இப்போ
    உம் வல்லமை என்னில் காணட்டும் - பாலிலும்
                                            Verses: Samuel H. Hodges
                                            Chorus: E.R. Latta

பாடல் 187: ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே


    O Lamb of God - 448
          (Tune 613 of ESB)

1. ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே!
    உம்மைத் தேடி ஆத்மம் தவிக்குதே;
    மான் நீரோடை தேடி அலையுமாப்போல்
    என் உள்ளமும் உம்மைத் தேடுதே தேவனே!

    பல்லவி

    பாதம் பணிகிறேன்
    யாவையும் தாறேன்
    நிலைத்துப் போர் செய்ய
    என் நேச மீட்பர்க்காய்

2. தேவாவியே! உம் வல்லமையினாலே
    பாவம் சுயம் அகந்தையும் கொல்லும்!
    என்னுள்ளத்தின் துர் ஆசைகளை நீக்கும்
    உமதாலயமாய் என்னுள்ளம் நீர் ஆளும்! - பாதம்
 
3. உம்மினின்று என்னைப் பிரித்த பாவம்
    துக்கத்துடன் நான் வெறுத்து வாறேன்;
    என் உள்ளத்தின் இருளை நீர் சிந்திய
    உம் இரத்தத்தால் இப்போ சுத்திகரியுமேன் - பாதம்

4. என் நேசரே! நீர் வானாசனம் விட்டீர்!
    என் உள்ளத்தில் என்றும் அரசாளும்!
    வாஞ்சையுடன் உம்மைத்தேடி நான் இதோ
    என் சஞ்சலம் நீங்கக் காத்து ஜெபிக்கிறேன்! - பாதம்
                                                                       Catherine Booth - Clibborn

பாடல் 188: நெஞ்சே கேள்


    Hark, my soul! It is the Lord - 110
                            (Tune 282 of ESB)

    இராகம்: சாந்தமுள்ள இயேசுவே தாளம்: திரிசடை

1. நெஞ்சே கேள்! உன் ஆண்டவர்
    அறையுண்ட இரட்சகர்!
    கேட்கிறார் என் மகனே!
    அன்புண்டோ என் பேரிலே?


2. நீக்கினேன் உன் குற்றத்தை
    கட்டினேன் உன் காயத்தை
    தேடிப் பார்த்து இரட்சித்தேன்!
    ஒளி வீசப் பண்ணினேன்!

3. தாயின் மிக்கப் பாசமும்
    ஆபத்தாலே குன்றினும்
    குன்ற மாட்டா தென்றுமே
    ஒப்பில்லா என் நேசமே

4. என தன்பின் பெருக்கும்
    ஆழம் நீளம் உயரமும்
    சொல்லி முடியாதது பார்
    என்னைப் போன்ற நேசர் யார்?

5. திவ்ய ரூபம் தரிப்பாய்
    என்னோடரசாளுவாய்!
    ஆதலால் சொல் மகனே!
    அன்புண்டோ என் பேரிலே?

6. இயேசுவே! என் பக்தியும்
    அன்பும் சொற்ப மாயினும்
    உம்மையே நான் பற்றினேன்!
    அன்பின் சுவாலை ஏற்றுமேன்!
                                     William Cowper

பாடல் 189: உம்மாலேயன்றி இரட்சகா!


    O Christ, in Thee my soul - 547
                 (Tune 102/ 101 of ESB)

1. உம்மாலேயன்றி இரட்சகா!
    பேர் நன்மை காண்கிலேன்;
    மெய்ச் சமாதானம் இன்பமும்
    வேறெங்கும் பெற்றிலேன்

    பல்லவி

    வெறொன்றினாலும் இரட்சகா!
    மெய்ப் பாக்யம் அடையேன்
    உம்மாலே தான் என் ஆண்டவா!
    சந்தோஷமாகிறேன்

2. பேரன்பை உணராமலே
    மெய்ப் பாக்யம் நாடினேன்
    நான் ஆவலோடு தேடியும்
    ஏமாறிப் போயினேன் - வேறொன்றி

3. பூலோகப் பொருள் இன்பத்தை
    பின்பற்றி நம்பினேன்
    சற்றேனும் அற்ப வாழ்வினால்
    நான் திருப்தியாகிலேன் - வேறொன்றி

4. இப்போதே உந்தன் இரட்சிப்பை
    கண்டிளைப்பாறினேன்;
    ஆனந்தம் பொங்கி இன்பமாய்
    நான் போற்றிப் பாடுவேன் - வேறொன்றி

Wednesday, November 23, 2011

பாடல் 190: கர்த்தா! எந்தனை நீர்


    I hear Thy welcome voice - 423
                          (Tune 137 of ESB)

    இராகம்: உம் முன் நிற்க தேவே - 181

1. கர்த்தா! எந்தனை நீர்
    அழைக்கிறீர், கேட்கிறேன்!
    கல்வாரியின் உதிரத்தில்
    கழுவப்படவே!

    பல்லவி

    கல்வாரி நாதா
    குருசண்டை வாறேன்
    தாழ்மையாய் ஜெபிக்கையில்
    சுத்திகரியுமேன்!

2. தளர்ந்த பாவிக்கு
    தாறீர் உந்தன் சக்தி!
    தீமை யாவும் எனில் நீக்கி
    தீ தறச் செய்கிறீர்! - கல்வாரி

3. இன்னும் வா! என்கிறீர்
    இனி தன்பு பக்தி
    மண்ணிலும் விண்ணிலும் பெற்று
    மாசற்று வாழவே! - கல்வாரி

4. உண்மை விடுதலை
    பெற்ற ஆத்மாவிலே
    எல்லாம் நிறைவேறினதாய்
    சாற்றுறீர் சாட்சியாய் - கல்வாரி
                                Lewis Hartsough

பாடல் 191: என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்


    Lord, through the Blood of the Lamb - 437
                          (Tune 512 of ESB)

1. என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்
        செய்யும் சுத்தம்!
    என் பாவம் நீங்க நான் ஜெபிப்பதால்
        செய்யும் சுத்தம்!
    முன் பாவச் சேற்றிலே நான் அமிழ்ந்தேன்
    அநேகமாய்த் தப்பிதங்கள் செய்தேன்
    நீர் தந்த வாக்கை நான் நம்பி வாறேன்
        செய்யும் சுத்தம்!

2. நான் வெறுக்கும் உள் வினையினின்றும்
        செய்யும் சுத்தம்!
    லோக மாம்ச பாசக் கறையினின்றும்
        செய்யும் சுத்தம்!
    மீட்பரே! உம் வாக்கை நம்பி வாறேன்
    மாய்மாலனாய் உம்மை நோகமாட்டேன்
    லோகத்தார் செல்பாதை செல்லமாட்டேன்
        செய்யும் சுத்தம்!

3. வாதிக்கும் பாவத் துக்கத்தினின்று
        செய்யும் சுத்தம்!
    நாசத்தைக் காட்டும் பயத்தினின்று
        செய்யும் சுத்தம்!
    மீட்பரே! உம்மால் நான் கழுவப்பட
    பிள்ளைபோல் நம்பி என் கையை நீட்ட
    துணிந்து நீர் என்னை சுத்தி செய்ய
        கெஞ்சுகிறேன்!

4. லோகத்தார் வீம்புக் கஞ்சாதபடி
        செய்யும் சுத்தம்!
    பயமின்றி உம்மைப் போற்றும்படி
        செய்யும் சுத்தம்!
    உம்மை நான் சேர்ந்தவன் என்றறிய
    என்னைப் பலப்படுத்தி நீர் ஆள
    சோதனை நாளில் நான் கீதம் பாட
        செய்யும் சுத்தம்!
                           Herbert H Booth 1862-1926 (England)

பாடல் 192: இந்நேரம் வந்து என்னை


    பல்லவி

    இந்நேரம் வந்து என்னை சுத்தம் செய்யும்!
    சுத்தம் செய்யும் - தேவா - சுத்தம் செய்யும்!

    சரணங்கள்

1. பாவத் துக்கமெல்லாம் நீங்கிடவே
    நீங்கிடவே - சுவாமி - நீங்கிடவே - இந்நேரம்

2. உள்வினை வேர் யாவும் போய்விடவே
    போய்விடவே - சுவாமி - போய்விடவே - இந்நேரம்

3. உம் வாக்கை நம்பி நான் இப்போ வாறேன்
    இப்போ வாறேன் - சுவாமி - இப்போ வாறேன் - இந்நேரம்

4. கல்வாரி ஜீவாறு ஓடுதிப்போ!
    ஓடுதிப்போ - எனக்காய் - ஓடுதிப்போ - இந்நேரம்

5. இயேசுவின் இரத்தத்தால் சுத்தம் செய்யும்
    சுத்தம் செய்யும் - தேவா - சுத்தம் செய்யும் - இந்நேரம்

பாடல் 193: தூய நெறியில் வாழவே


    பல்லவி

    தூய நெறியில் வாழவே - துணைசெய் தேவே!

    சரணங்கள்

1. தீய இருதயத்தால் - தெளிவில்லாத மனத்தால்
    தரிசிக்கக்கூடுமோ? - அதால் துணைசெய் தேவே! - தூய

2. பல மிகு மாம்ச - பாவ இச்சாம்ச
    சுவையில் சிக்காது நிமிடம் - துணைசெய் தேவே! - தூய

3. கெட்ட விஷயங்கள் - ஒட்டிக்கொள்ளாமல்
    துட்டருடன் கலவாமல் - துணைசெய் தேவே! - தூய

4. அநித்திய உலகத்து - ஆசையோடெதிர்த்து
    துணிந்து ஜெயம் பெற நித்தம் - துணைசெய் தேவே! - தூய

5. தேவ வசனத்தை - தினந்தினம் வாசித்தே விஸ்வாச
    ஜெபத்தில் தரிக்க - துணைசெய் தேவே! - தூய

6. பார்வை பேச்சாலும் - கேள்வியினாலும்
    சோரம் போகாமலிருக்க - துணைசெய் தேவே! - தூய

7. பாவிக ளேகும் பாதை செல்லாது
    ஜீவிக்கத் தமியேனுக்கு - துணைசெய் தேவே! - தூய

பாடல் 194: தேவே கண்ணோக்குமேன்

    பல்லவி

    தேவே கண்ணோக்குமேன் - என்
    தீய நெஞ்சை மாற்றுமேன்!

    அனுபல்லவி

    கோவே! உம்மைப்போல என்னை
    கோதற்றவனாக்கும் மாசற்று ஜீவிக்க

    சரணங்கள்

1. உள்ளம் நொந்து உம்மண்டை யான்
    உருகி வாறேனையனே
    தள்ளாடு மென் நெஞ்சைத் தேற்றி
    தாங்கிக் காருந் தேவா - பாந்தமா யெந்தனை - தேவே

2. நொந்துடைந்த எந்தன் மனம்
    உந்தனுக்கு குகந்ததே
    தந்தையே! எனைத் தள்ளாது
    சொந்தமா யாக்க நான் கெஞ்சுகிறேன் நாதா! - தேவே

3. ஆத்மா தேகம் ஆவியும் என்
    அன்பனே படைக்கிறேன்
    பாத்திரமான பலியாய்
    ஏற்று நீர் காத்திடும் நேத்திரம் போலென்னை! - தேவே
                                                                                K.S. Abraham

பாடல் 195: ஆவியளித்திடும் ஆதிபரனே


    இராகம்: தோடி தாளம்: ஆதி

    பல்லவி

    ஆவியளித்திடும் ஆதிபரனே - ஏழை
    ஆத்துமம் பெலன் பெற!

    அனுபல்லவி

    பாவி எந்தனைப் பண்பாய்ப் பார்த்திரங்கையா!
    மாய வலையிற் பட்டு மயங்காதிருக்க மெய்யாய்

    சரணங்கள்

1. ஞான போதனைக் கிரு செவிகளைச் சாய்க்க
    ஈன போதனைக் கண்டு வெருண்டுமே விலக்க
    வானவா! வரப்பிரசாதமே யளிக்க
    ஈசனே உன் சித்தம் ஏழைமேலே சிறக்க - ஆவி

2. சத்திய வேதத்தை நித்தமும் தியானிக்க
    சன்மார்க்க பாதையை சார்ந்துமே வசிக்க
    பக்தி வழி நோக்கிப் பாரினிலே நடக்க
    சித்த மிரங்கி எந்தன் சீர்கேட்டை நீக்கித் தேவா - ஆவி

3. வாயின் தாறுமாறதை பேயின் குண மென்று
    நாவு அடங்கா தொரு நாச நெருப்பா மென்று
    சாவுக் கேதுவான தோர் சாப விஷமதென்று
    காவல் காத்துமே நாளும் கதிபெற்றிடவே நன்று! - ஆவி

4. இருதயத்தைக் காவல் காப்பதுவே சக்தி!
    இடறுவ தில்லாது ஒழுகுவதே பக்தி!
    உருவாக்கு மிவையுடன் உம்பரா எனில் சுத்தி!
    திருமுடனதை யெடுத் தோதிடத் தாரும் புத்தி -
ஆவி
                                                                      K.S. Abraham

பாடல் 196: வாரும் இரட்சண்ய மூர்த்தி


    பல்லவி

    வாரும் இரட்சண்ய மூர்த்தி
    காரும் என்னை உம் அன்பால்!

    சரணங்கள்

1. மலைபோ லெந்தன் முன்னின்று
    மலைக்கச் செய் பாவந்தனை
    தலைவா நின் இரத்தத்தினால்
    தொலைத் தெனை இரட்சித்து ஆள்! - வாரும்

2. கண்ணீரோ டுன் சந்நிதி
    புண்ணியா வந்தேன் நம்பி;
    நண்ணு மெனக் கிரங்கி
    பண்ணு மெந்தனைச் சுத்தி! - வாரும்

3. தருவீருன் ஜீவன் சக்தி
    வருவேனா னுந்தாள் பற்றி;
    குருவே! உனை விடாதுன்
    திருப்பணி செய்வேன் தினம்! - வாரும்

பாடல் 197: கருணாகரா - காருமென்பரா


    இராகம்: கதனகுதூகலம் தாளம்: ஆதி

    பல்லவி

    கருணாகரா - காருமென்பரா
    அருளளிப்பாயே அண்டினேனுன் தாளே

    அனுபல்லவி

    வருந்தும் பாவி வந் திளைப்பாறி
    விருந்துண் பீரென்று விளம்பினீ ரன்று

    சரணங்கள்

1. சந்ததமும் நானே சிந்தனை செய்தேனே
    வந்தருள் செந்தேனே! மைந்தன் நம்பினேனே
    கந்த மலரா தந்தே னென்னைப் பூராய்
    எந்தை இயேசு நாதா! ஏற்றிடுவீர் வேதா - கருணாகரா

2. நன்னெறி புகுத்தி நவையதை நீக்கி
    இன்னலை யகற்றி இகலதைப் போக்கி
    உன் னழகைத் தந்து ஒருங்காய்க் காத்து
    உன்னதத் துய்யச் செய் மன்னா இயேசு நாதா! - கருணாகரா

3. கூறும் எங்கள் மறைக் குகந்த நல்லிறை
    தேறு மவர் ஜெபத் தியானமே என் துறை;
    வேறு ஒன்றுமே வேண்டிலேனே மெய்!
    பேறு தந்தனையே பேரொளிப் ப்ரகாசா! - கருணாகரா
                                                                          K.S. Abraham