Tuesday, October 25, 2011

பாடல் 237: தம் மக்கள் காக்கிறீர்


    Lord Jesus thou dost keep Thy child - 741
                  (Tune 467, 468 of ESB)

1. தம் மக்கள் காக்கிறீர், கர்த்தா
    பொங்குந் துயர் களிப்பிலும்
    நம்புகிறேன் உம்மில்;
    தம் மீட்பின் சக்தி அற்புதம்,
        தந்தீர் யாவும் கல்வாரியில்
        அவ்வன்பு உமதே

2. துதிப்பேன் இரட்சகர் உம்மை
    பாடுவேன் என் புதுப் பாட்டை
    உரைப்பேன் உம் குணம்,
    அளவற்றதும் கிருபை
        ஒளி மங்கிடா தும் முகம்
        தாறீர் உமதுள்ளம்

3. தம் வாக்கை நம்பி நிற்கிறேன்
    தம் வல்லமை தனிலும்
    தம் கரம் தேற்றிடும்
    தம் வாக்கால் ஜெயம் பெறுவேன்
        தாமே எல்லாப் புகழும்
        தமதே ஜெயமும்!

4. பூரணமாக்கும் உம் அன்பு
    பூர்ண விடுதலை தரும்;
    தாங்கும் உம் கிருபை
    மங்கா நம்பிக்கை இன்பமும்
        தம் பூரண வல்லமையும்
        தம்மில் என தேயாம்!

பாடல் 238: சோதனைக் கிணங்கேல்


    Yield not to  temptation - 823
               (Tune 579 of ESB)

1. சோதனைக் கிணங்கேல் இணங்கல் பாவம்
    சோதனை ஜெயித்தால் பின் வரும் ஜெயம்
    தைரியமாய் முன்செல் இச்சை அடக்கி
    இயேசுவை நோக்கிப்பார் காப்பார் அந்தம் வரை

    பல்லவி

   இரட்சகரை நீ கேட்டால் ஆவலாய் துணை செய்வார்;
   தேற்றி பெலனை ஈவார் காப்பார் அந்தம்வரை

2. முற்றாய்ப் படைத்திடு தேவனுக்குன்னை
    முற்றுமாய் இரட்சிப்பார் தம் இரத்தத்தாலே;
    விழித்திருந்திடு மெய் ஜெபத்துடன்
    இயேசுவை நோக்கிப்பார் காப்பார் அந்தம்வரை - இரட்சகரை

3. ஜெயம் பெற்றோருக்கு ஈவார் கிரீடம்
    ஜெயம் நிச்சயமே அதைரியம் வந்தாலும்
    ஈவார் புது பெலன் நமது மீட்பர்
    இயேசுவை நோக்கிப்பார் காப்பார் அந்தம்வரை - இரட்சகரை
                                                                                            Horatio R Palmer

பாடல் 239: ஓர் ஏழை வீட்டில் நான் சென்றேன்!


    Tune: I bring to thee my heart - 489 & 463 of ESB

1. ஓர் ஏழை வீட்டில் நான் சென்றேன்!
    அங்கே மா இன்பம் நான் கண்டேன்
    தரித்திரர் ஆனாலும்
    சொன்னாள் அங்குள்ள விதவை;
    என்னின்பத்திற்கு உதவி
    இயேசு எனதெல்லாம்

    பல்லவி

    இயேசுவே எனதெல்லாம்
    ஆம்! இயேசுவே எல்லாம்

2. இரட்சிப்பை மற்றோர்க்குச் சொல்ல
    துன்பப் பாதையில் தாம் செல்ல
    தத்தம் செய்தோர் எல்லாம்
    தாகம் பசி சுவை யில்லை
    என்றார் எம் இன்பக் கன்மலை
    இயேசு எனதெல்லாம் - இயேசுவே

3. மூர்க்கர் வெறியர் மத்தியில்
    மீட்பரின் நேசம் சொல்கையில்
    பட்ட துன்பம் பார்த்தோம்!
    ஆனால் அவர்கள் வதைகள்
    மா இன்பமாய்ச் சகித்தார்கள்
    அவர்க் கேசு எல்லாம் - இயேசுவே

4. மரண நதி நெருங்கி
    நோய்கள் வந்தாலும் நடுங்கி
    திகைக்காமல் செல்வோம்!
    எங்கள் யுத்தம் முடிந்தது
    சஞ்சல நாள் முடிந்தது
    ஆமென் இயேசு எல்லாம்! - இயேசுவே
                                                   Herbert H. Booth


பாடல் 240: உனக்கொத்தாசை வரும்


    இராகம்பிலஹரி தாளம்: திஸ்ரஏகம்

    பல்லவி

    உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம் இதோ!
   
    அனுபல்லவி

    தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவானே

    சரணங்கள்

1. வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின்
    மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? -  உனக்கொத்தாசை

2. காலைத் தள்ளாட வொட்டார் கரத்தைத் தளர வொட்டார்;
    மாலையுறங்க மாட்டார் மறதியாய்ப் போக மாட்டார் -  உனக்கொத்தாசை

3. கர்த்தருன்னைக் காப்பவராம் கரமதில் சேர்ப்பவராம்
    நித்திய முந்தனுக்கு நிழலாயிருப்பவராம் -  உனக்கொத்தாசை

4. பகலில் வெயிலெனிலும் இரவில் நிலவெனிலும்
    துயர் தருவதுமில்லை துன்பஞ் செய்வதுமில்லை -  உனக்கொத்தாசை

5. தீங்கு தொடராதுன்னை தீமை படராதுன்மேல்
    தாங்குவோர் தூதர் கோடி தாளிடறாதபடி -  உனக்கொத்தாசை

6. போக்கும் ஆசீர்வாதாமாம் வரத்தும் ஆசீர்வாதமும்;
    காக்கைக் குஞ்சுகள் முதல் கதறி நம்பிவிடுமே -  உனக்கொத்தாசை

7. துன்ப துயரத்திலும் துக்க சமயத்திலும்
    இன்பமுறும் பொழுதும் எல்லாம் உனக்கவரே -  உனக்கொத்தாசை

Sunday, October 23, 2011

பாடல் 241: தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ!


    பல்லவி

   தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ!
   சிறுமை தாழ்ச்சி அடைகிலனே

    அனுபல்லவி

    ஆவலதாய் எனைப் பைம்புல் மேல்
    அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் 

1. ஆத்துமந்தன்னைக் குளிரப் பண்ணி
    அடியேன் கால்களை நீதி என்னும்
    நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
    நிதமும் சுகமாய் நடத்துகின்றார் - தேவ

2. சா நிழல் பள்ளத் திறங்கிடினும்;
    சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
    வானபரன் என்னோடிருப்பார்,
    வளை தடியும் கோலுமே தேற்றும் - தேவ

3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
    பாங்காய் எனக்கென் றேற்படுத்தி
    சுகதயிலம் கொண்டென் தலையைச்
    சுகமாய் அபிஷேகம் செய்குவார் - தேவ

4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
    அருளும் நலமுமாய் நிரம்பும்;
    நேயன் வீட்டினில் சிறப்போடே
    நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன் - தே

                                                                     த. யோசேப்பு

பாடல் 242: எந்தன் விசுவாசம் தேவாட்டுக் குட்டியே


    My faith looks up to Thee - 743
                 (Tune 215, 216 of ESB)

1. எந்தன் விசுவாசம்
    தேவாட்டுக் குட்டியே,
    நோக்குதும்மை;
    கேளும் என் விண்ணப்பம்
    நீக்கும் என் குற்றத்தை
    முற்றும் உம் சொந்தம் நான்
    இன்று முதல்

2. தாரும் உம் கிருபை                          
    சோர்ந்த என் நெஞ்சுக்கு
    பெலன் ஈயும்
    ஆ! எனக்காகவே
    மரித்தீர் இயேசுவே
    என் அன்பின் சுவாலையை
    ஓங்கச் செய்யும்

3. திகைத்து நிற்கையில்
    துக்கங்கள் சூழ்கையில்
    வழி காட்டும்;
    அந்தகாரம் நீக்கும்
    கண்ணீர் துடைத்திடும்
    உம்மில் நிலைத்திட
    அருள் தாரும்

4. மரிக்கும் நேரத்தில்
    கலக்கம் நேரிடில்
    சகாயரே;
    அன்புள்ள இரட்சகா
    நீக்கும் என் பயத்தை,
    சேர்த்திடும் மோட்சத்தில்
    என் ஆத்துமாவை
                            Ray Palmer

பாடல் 243: பாவக் கறைகள் எல்லாம் நீங்கி


    All the guilty past is washed away - 188
                    (Tune 670 of ESB)

1. பாவக் கறைகள் எல்லாம் நீங்கி
    தண்டனைக்குத் தப்பினேன்
    சுத்த ஆவி உம் வல்லமையால்
    பூரண மீட்பிப்போ தாரும்

    பல்லவி

    சுத்த ஆவியே வாரும்!
    சித்தம்போல் செய்ய வாரும்!
    உள்ளத்தின் தடைகளை நீக்கி
    உமக் கேற்ற வீடாய் ஆக்கும்

2. வாரும் ஆவியே சுத்தஞ் செய்யும்
    மெய் சிந்தை மனமெல்லாம்
    என்னைக் குருசி லறைந்திடும்
    என் இயேசுவைப் போலாக்கிடும் - சுத்த

3. எனக்காய் மாண்ட ஆண்டவர்க்காய்
    போரிடப் பலம் தாரும்
    கல்வாரி மேட்டின் தயவை நான்
    பாவிக்குக் காட்டச் செய்திடும் - சுத்த

4. பூரண ஆனந்த சந்தோஷம்
    கிடைத்த தெனக் கும்மால்;
    திவ்ய கிருபையால் நிரப்பி
    என்னை உம் வீடாய் ஆக்கினீர் - சுத்த
                                                      Richard Slater

பாடல் 244: வாரும் சுத்த ஆவியே!


    Come, thou burning Spirit, come! - 481
                      (Tune 277, 278 of ESB)

1. வாரும் சுத்த ஆவியே!
    அடியார்கள் உள்ளத்தில்
    மூன்றாம் ஆள் திரியேகத்தில்
    மகிமையைக் காட்டிடும்

    பல்லவி

    வாரும் வல்ல ஆவியே,
    அடியார் உள்ளத்திலே
    வாஞ்சையை நீர் தீர்த்திட
    வாரும் சுவாமி வாரும்!
    வாரும் சுவாமி! வாரும் என் சுவாமி! வாரும்!

2. ஆத்மா தேகம் யாவையும்
    இந்த வேளை அடியேன்
    பூசையாய்ப் படைக்கிறேன்;
    அன்பாய் நீர் சுத்தி செய்யும் - வாரும்

3. நேசமானம் வஸ்துக்கள்
    உற்றார் பெற்றார் யாவரும்
    மற்றும் ஆசா பாசங்கள்;
    முற்றும் இதோ நீர் வாரும் - வாரும்

4. நம்பிக்கையோடிதோ நான்
    பிராண நாதர் பலத்தால்
    ஆசீர்வாதம் பெறுவேன்
    விசுவாச ஜெபத்தால் - வாரும்
                                        Charles Fry

பாடல் 245: வாரும் நித்திய ஆவியே!


    Come Thou everlasting Spirit - 191
             (Tune 267 or 268 of ESB)

1. வாரும் நித்திய ஆவியே!
    தாரும் தவிப்பவர்க்கு;
    பாரில் இயேசு பாடால் வந்த
    பலன் யாவும் முற்றுமாய்

    பல்லவி

    நேசமுள்ள இயேசுவுக்காய்,
    தாசன் நானென் யாவையும்
    பாசமாய் இதோ படைத்து
    பற்றினேன் சிலுவையை

2. அவரடைந்த கஸ்தியும்
    அதால் வந்த ரட்சையும்
    அறிந்த நித்திய ஆவியே!
    எனக் கதைப் போதியும் - நேசமுள்ள

3. அவர் மரணக் காட்சியை
    நேரில் கண்ட சாட்சியே
    நீரே எனக்கு கிறிஸ்துவின்
    நேச ரூபம் காட்டிடும் - நேசமுள்ள

4. நாம் வதைத்திட்ட நாதனை
    எண்ணினால் மா வேதனை
    தாமீந்திட்ட மீட்பதனை
    தந்துதவும் ஆவியே! - நேசமுள்ள
                                       Charles Wesley

பாடல் 246: கர்த்தா உம் வாக்குத்தத்தங்கள்


    Lord, we believe to us and ours - 216
                         (Tune 48, 61 of ESB)

1. கர்த்தா உம் வாக்குத்தத்தங்கள்
    சத்தியம் எமக்கல்லவோ?
    சுத்த பெந்தெகொஸ்தாவியின்
    தத்வம் தரக் கெஞ்சுகிறோம்

2. ஒன்றாய்க் கூடி ஓர் மனமாய்
    இன்று காத்து ஜெபிக்கிறோம்
    அன்று தம் சவால் இரட்சகர்
    கொண்ட சுத்தாவியே வாரும்!

3. கேட்போர் பெற்றுக்கொள்வாரென்ற
    கிருபை வாக்கு மெய்யானால்
    மீட்பா! உமது ஆவியின்
    தீட்சை எமக்கிப்போ தாரும்!

4. ஆவியே எம் ஆத்மம் உம்மை
    ஆவலாய் வாஞ்சிக்கின்றது;
    தாவி நீர் எங்கள் மேல் வந்து
    தங்கிடும் எம் உள்ளங்களில்
                                   Charles Wesley

பாடல் 247: தேவா சுத்தி செய்யும் அக்கினி


    Thou Christ of burning, cleansing flame - 203
                                (Tune 235, 337 of ESB)

1. தேவா சுத்தி செய்யும் அக்கினி
    அனுப்பும் அக்கினி எங்களில்;
    திவ்விய இரத்தம் கொண்ட ஈவு
    அனுப்பும் அக்கினி எங்களில்;
    காத்து நிற்கும் எங்கள் மேலே,
    கர்த்தா உந்தனருளாலே
    தாரும் பெந்தெகொஸ்தின் ஆவி,
    அனுப்பும் அக்கினி எங்களில்!

2. எலியாவின் தேவரீர் கேளும்
    அனுப்பும் அக்கினி எங்களில்;
    ஜீவன் சாவிலும் நிலை நிற்க
    அனுப்பும் அக்கினி எங்களில்;
    பாவம் முற்றுமா யழிந்திட,
    பரத்தின் ஒளி பெற்றிட,
    மார்க்க அதிர்ச்சி வந்திட
    அனுப்பும் அக்கினி எங்களில்

3. வேண்டும் அக்கினி தான் எமக்கு
    அனுப்பும் அக்கினி எங்களில்
    வேண்டும் அனைத்தும் ஈந்திடும்
    அனுப்பும் அக்கினி எங்களில்
    நீதி செய்துமே எந்நாளும்
    நித்தம் போர் வெல்ல அருளும்;
    சுத்தராய் வாழ இப்பூவில்
    அனுப்பும் அக்கினி எங்களில்!

4. இளைத்த உள்ளம் பெலப்பட
    அனுப்பும் அக்கினி எங்களில்;
    அழியும் உலகோரை மீட்க,
    அனுப்பும் அக்கினி எங்களில்;
    பலியாகவே எங்களை
    படைத்தோம் உம் பீடத்திலே
    பார்த்திதை ஏற்றுக் கொள் தேவே!
    அனுப்பும் அக்கினி எங்களில்


    William Booth 1829-1912 (Nottingham, England)

பாடல் 248: வல்ல ஆவியே!


     பல்லவி

    வல்ல ஆவியே! சுவாமி எங்கள் மீதிலே,
    வந் திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே!

    சரணங்கள்

1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வந்த ஆவியே
    எங்கள் மேலே வந்திறங்கும் சுத்த ஆவியே - வல்ல

2. பாந்தமுடனே பரிசுத்த ஆவியே
    சார்ந்தெங்களை யுத்தத்திற்கு உயிர்ப்பியுமேன் - வல்ல

3. சென்ற காலத்தில் ஜெயம் பெற்றிடச் செய்த
    ஜெபத்தின் ஆவியை எங்களகத்திலூற்றும் - வல்ல

4. அன்புடன் தாழ்மை சமாதானம் பொறுமை
    இன்பமும் எங்களுக்குள்ளே பெருகிடவே - வல்

பாடல் 249: ஆவியை அருளுமேன் சுவாமி


    பல்லவி

    ஆவியை அருளுமேன் சுவாமி - எனக்காய்
    உயிர் கொடுத்த வானத்தின் அரசே!

    சரணங்கள்

1. உலகத்தை விட்டு இரட்சிக்கும் ஆவி,
    ஊமையர் வாய்களைத் திறந்திடும் ஆவி,
    பரிசுத்தவான்களில் வசித்திடும் ஆவி,
    பாவிகளைச் சிறை மீட்டிடும் ஆவி - ஆவியை

2. பாவியை நினைத்து நீர் உருகின ஆவி
    பரத்தை விட்டுப் புவியில் வரச் செய்த ஆவி,
    ஆவலாய் அடியேனைத் தேடின ஆவி,
    ஆனந்தக் களிப்பை அளித்திட்ட ஆவி - ஆவியை

3. பெந்தெகொஸ்தெனும் நாளில் பொழிந்திட்ட ஆவி,
    பக்தர்க்குப் புதுப் பெலன் அளித்திட்ட ஆவி,
    கல்வாரிப் பாதையில் நடத்திடும் ஆவி,
    கர்த்தரே! உம் சித்தம் செய்திடும் ஆவி - ஆவியை

4. பாவத்தை தேவரீர் காண்பதைப் போல,
    பரமனே! அடியேனும் தானாகக் காண
    தேவ வரமதனை அளித்திடும் ஐயா!
    தெளிவுடன் அதை நான் பாவிக்குக் கூற - ஆவியை

5. உலகத்தார் மாண்டு போகிறார் சுவாமி!
    உன்னத ஆவி வேண்டுமென் சுவாமி;
    மலர்ந்தெங்கள் முகங்களை நோக்குமேன் ஐயா
    மழைபோல் ஆவியை வருஷியும் ஐயா! - ஆவியை

பாடல் 250: தேவ ஆவியே வாரும்


    பல்லவி

    தேவ ஆவியே வாரும்
    ஜீவாவியே!

    அனுபல்லவி

    பாவியைப் பெருங் கோபியை
    தேவ துரோகியை,
    வெல்லும் வல்லவா!

    சரணங்கள்

1. ஆத்துமாக்களின்
    அந்தகாரம் நீக்க
    வல்லவா! பாவங் கொல்ல வா! பேயை
    வெல்ல வா! எங்கள் நல்லவா! - தேவ

2. கல்வி கற்றோரும்
    செல்வர் பெரியோரும்
    கர்த்தனே! உந்தன் சத்திய நெறி
    சித்தம் யாதென்றுணரவே! - தேவ

3. மானிடர் ஞானம்
    மனதையும் மாற்றுமோ?
    வானத்தை விட்டு மானிடனாகி
    மீட்பின் பாதை திறந்தார்! - தேவ