இராகம்: கமாசு - ஜவாளி மெட்டு
பல்லவி
அன்பே பிரதானம் - சகோதர
அன்பே பிரதானம்
சரணங்கள்
1. பண்புறு ஞானம் - பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் - இவைகளிலெல்லாம் - அன்பே
2. பலபல பாஷை - படித்தறிந்தாலும்
கலகல வென்னும் - கைம்மணியாமே - அன்பே
3. என் பொருள் யாவும் - ஈந்தளித்தாலும்
அன்பிலையானால் - அதிற்பயனில்லை - அன்பே
4. துணிவுடனுடலைச் - சுடக்கொடுத்தாலும்
பணிய வன்பிலாற் - பயனதிலில்லை - அன்பே
5. சாந்தமும் தயவும் - சகல நற்குணமும்
போந்த சத்தியமும் - பொறுமையுமுள்ள - அன்பே
6. புகழிறுமாப்பு - பொழிவு பொறாமை
பகையநியாயப் - பாவமுஞ் செய்யா - அன்பே
7. சினமடையாது - தீங்கு முன்னாது
தினமழியாது தீமை தராது - அன்பே
8. சகலமுந் தாங்கும் - சகலமும் நம்பும்
மிகைப்பட வென்றும் - மேன்மை பெற்றோங்கும் - அன்பே
No comments:
Post a Comment