Wednesday, September 28, 2011

பாடல் 425: ஐயா,உமது சித்தம்


    இராகம்: தேசியதோடி  தாளம்: ஆதி
   
    பல்லவி

    ஐயா,உமது சித்தம் ஆகிடவே வேணும்

    அனுபல்லவி

    மெய்யாய் எனது சித்தம் வெகு மோசமே காணும்

    சரணங்கள்

1. ஆடுபோல் வழி தப்பி அவனவன் வழி யொப்பி,
    கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர் - ஐயா

2. ஜீவனோ, மரணமோ, செல்வமோ, வறுமையோ;
    யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும் - ஐயா

3. வசை யிசை பகை நேசம் வாழ்வுயர் வதிமோசம்
    பசி நிர்வாணம் நாசம் பாடு நோயடைகினும் - ஐயா

4. என்னிஷ்டம் வாயாததால் எத்தனை துயர்கொண்டேன்
    பொன்னடிக் கீழடங்கிப் புகழுமக்கென்று வாழ்வேன் - ஐயா

5. குயவன் கைக் களிமண்ணாய் குருவே யுமக்கமைவேன்
    நயமிது வென்றறிந்த ஞானமுள்ள பிதாவே - ஐயா
                                                                  சங் G.S. வேதநாயகம்

No comments:

Post a Comment