Saturday, September 24, 2011

பாடல் 431: தொழுகிறோம் எங்கள் பிதாவே

    பல்லவி

    தொழுகிறோம் எங்கள் பிதாவே
    பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
   
    அனுபல்லவி

    பரிசுத்த அலங்காரத்துடனே
    தரிசிப்பதினால் சரணம் சரணம்

    சரணங்கள்

1. வெண்மையும் சிவப்பு மானவர்
    உண்மையே உருவாய்க் கொண்டவர்
    என்னையே மீட்டுக் கொண்டவர்
    அன்னையே இதோ சரணம் சரணம் - தொழுகிறோம்

2. தலை தங்கமய மானவர்
    தலை மயிர் சுருள் சுருளானவர்
    பதினாயிரம் பேரில் சிறந்தவர்
    பதினாயிரமாம் சரணம் சரணம் - தொழுகிறோம்

3. கண்கள் புறா கண்கள் போல
    கன்னங்கள் பாத்திகள் போல
    சின்னங்கள் சிறந்ததாலே
    எண்ணில்லாத சரணம் சரணம் - தொழுகிறோம்

4. கரங்கள் பொன் வளையல்கள் போல
    நிறங்களும் தந்தத்தைப் போல
    கால்களும் கல் தூண்கள் போல
    காண்பதாலே சரணம் சரணம் - தொழுகிறோம்

5. சமஸ்த சபையின் சிரசே
    நமஸ்காரம் எங்கள் அரசே
    பிரதான எம் மூலைக்கல்லே
    ஏராளமாம் சரணம் சரணம் - தொழுகிறோம்

6. அடியார்களின் அஸ்திபாரம்
    அறிவுக் கெட்டாத விஸ்தாரம்
    கூடி வந்த எம்மலங்காரம்
    கோடா கோடியாம் சரணம் சரணம் - தொழுகிறோம்

7. பார்த்திபனே கன ஸ்தோத்திரம்
    கீர்த்தனம் மங்களம் ஸ்தோத்திரம்
    வாழ்க வாழ்க வாழ்க என்றும்
    அல்லேலூயா ஆமென் ஆமென் - தொழுகிறோம்

No comments:

Post a Comment