Wednesday, September 28, 2011

பாடல் 409: அதோ! மாட்டுத் தொழு பார்!


    "Who is He in yonder Stall" - 104
                 (Tune 319 of ESB)

1. அதோ! மாட்டுத் தொழு பார்!
    மேய்ப்பர் போற்றும் பாலன் யார்?

    பல்லவி

    இவர் தான் மா வல்ல கர்த்தர்
    இவர் மகிமையின் ராஜா
    திருப்பாதம் பணிவோம்
    ராஜ கிரீடம் சூட்டுவோம்

2. கஷ்டமாய் வனத்தில் யார்
    உபவாசம் செய்கிறார்? - இவர்

3. அன்பின் வார்த்தை சொல்வதார்
    ஜனம் துதிசெய்வோர் யார்? - இவர்

4. துக்க பாரம் நோய் உள்ளார்
    குணமாக்குகிறதார்? - இவர்

5. லாசரின் கல்லறை பார்
    அங்கு கண்ணீர் விட்டோர் யார்? - இவர்

6. திரள் ஜனக்கூட்டத்தார்
    போற்றி வாழ்த்தும் இவர் யார்? - இவர்

7. இரத்த வேர்வை சிந்தி யார்
    ஜெபத்தில் போராடினார்? - இவர்

8. சிலுவையின் காட்சி பார்
    அரும் ஜீவன் விட்டதார்? - இவர்

9. சாவை வென்றெழுந்ததார்
    அதால் நம்மை மீட்டோர் யார்? - இவர்

10. ராஜ கோலம் அணிந்தார்
    லோகம் யாவும் ஆள்கிறார் - இவர்
                                          Benjamin R. Hanby

பாடல் 410: நகரத்துக்கு புறம்பே

    There is a green hill - 133
        (Tune 95, 107, 132 of ESB)

1. நகரத்துக்கு புறம்பே
    தூரத்திலோர் மலை மேல்
    சிலுவையில் கர்த்தர் மாண்டார்
    நம்மை இரட்சித்திட

    பல்லவி

    மா அன்பாய் நம்மை நேசித்தார்
    நாமும் நேசிப்போமே
    நம்பி திவ்ய மீட்பின் அன்பில்
    கர்த்தரின் வேலை செய்

2. அவர் நோவு நாம் அறியோம்
    நாவால் சொல்லொண்ணாதே
    நம்புகிறோம் நமக்காய் தான்
    நாதர் தொங்கி மாண்டார் -  மா

3. நம் பாவங்களை மன்னித்து
    நல்லோராக்கிடவும்
    திரு ரத்தத்தால் இரட்சித்து
    மோட்சம் சேர்க்க மாண்டார் -  மா

4. பாவப் பரிகாரம் செய்த
    நல்லோன் வேறாருமில்லை
    மோட்சம் திறந்து நம்மைச் சேர்க்க
    அவரால் தான் கூடும் மா
                      Cecil Francis Alexander

பாடல் 411: இயேசு கற்பித்தார் ஒளி வீசவே

    Jesus bids us shine - 841
            (Tune 698 of ESB)

1. இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
    சிறு தீபம் போல இருள் நீங்கவே
    அந்தகார லோகில் ஒளி வீசுவோம்
    அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்
    ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம்
    இயேசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம்
    அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

3. பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்
    உலகின் மா இருள் நீக்க முயல்வோம்
    பாவம் சாபம் யாவும் பறந்தடிப்போம்
    அங்கும் இங்கும் எங்க்கும் பிரகாசிப்போம்
                                                         Susan Warner

பாடல் 412: என்னாத்துமாவின் தீபமே

    Sun of my Soul
        (Tune 26 Of ESB)

1. என்னாத்துமாவின் தீபமே
    என்னருமை இரட்சகனே
    நீ ரென் சமீபமிருந்தால்
    இருள் பகலாய் மாறுமே

2. கண் மயங்கி நான் நித்திரையில்
    களைப்புற்றுக் கிடக்கையில்
    உன் மடியிலென் இரட்சகா
    ஒதுக்கி வைத்துக் காரையா

3. காலை முதல் மாலை வரை
    கர்த்தாவே நீரென்னோடிரும்
    உம்மையல்லாம் ஓர் பொழுதும்
    உயிர் விடத் துணிவேனே
                                          John Keble

பாடல் 413: நீங்காதிரும் என் நேச கர்த்தரே

    Abide with me - 670
          (Tune 517 of ESB)

1. நீங்காதிரும் என் நேச கர்த்தரே
    வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே
    மற்றோர் ஒத்தாசை அற்றுப் போயினும்
    நீர் மெய்ச் சகாயரே! நீங்காதிரும்

2. நீர் மேலே குமிழ் போல் என் ஆயுசும்
    இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்
    கண் கண்ட யாவும் மாறிப் போயினும்
    மாறாத கர்த்தரே நீங்காதிரும்

3. நீர் கூட நின்று தாங்கி வாருமேன்
    அப்போது தீமைக்கு நான் தப்புவேன்
    நீர் என் துணை என் பாதை காட்டியும்
    என் இன்ப துன்பத்தில் நீங்காதிரும்

4. நான் அஞ்சிடேன் நீர் கூடத் தங்கினால்
    என் க்லேசம் மாறும் உம் ப்ரசன்னத்தால்
    சாவே எங்கே உன் கூரும் ஜெயமும்?
    என்றாரவாரிப்பேன்; நீங்காதிரும்

5. நான் சாகும் அந்தகார நேரமே
    நீர் ஒளியாய் விண் காட்சி காட்டுமே
    பேரின்ப ஜோதி வீசச் செய்திடும்
    வாணாள் சாங்காலிலும் நீங்காதிரும் 
                                                   Henry Francis Lyte

பாடல் 414: தேவன் தங்குமெந்த வீடும்


    Happy the home  when God is there - 661
              (Tune 59, 86, 96, 117 of ESB)

1. தேவன் தங்கு மெந்த வீடும்
        திருப்பதி யாகும்;
    பரம ஆறுதல் ஐக்யம்
        அன்பும் பெற்று வாழும்!

2. கர்த்தன் நாமம் காதுக்கின்பம்
        ஆக்கும் வீடு மோட்சம்;
    காலை பாலர் இயேசைப் போற்ற
        களித்தென்றும் வாழும்!

3. ஜெபத் தொனி கேட்கும் வீடு
        செழித்து வாழுமே;
    ஜீவ வேதம் வாசிப்பொரும்
        மேல் நோக்கி வாழ்வரே!

4. கர்த்தாவே! எங்கள் வீட்டிலும்
        நித்தம் நீர் தங்கிடும்
    உத்தம மனதோடும் மேல்
        பக்தி தந்தருளும்!
                                            Henry Wase
   

பாடல் 415: என் தேவனே உம் மா நேசம்


    My God, how endless is Thy love! - 672
                   (Tune 16, 46 of ESB)

  
1. என் தேவனே உம் மா நேசம்
    அந்த மில்லாத துண்மையே;
    காலை தோறும் உம் கிருபையும்
    மாலை உம் ஈவும் நவமே!

2. காக்கிறீர் என்னைத் துயில்கையில்
    இராக்காலம் எந்நேரத்திலும்
    உம் வாக் கெனக்குத் தீபமே
    நல் மீட்பரென் மா பெலமே!

3. ஒப்புவித்தேன் என தெல்லாம்
    எப்போதும் என்னை நீர் ஆளும்
    பெற்றுக்கொள்ளும் நன்மைக்காக
    ஏற்றுக் கொள்ளும் என்றும் துதி
                                           Isaac Watts

பாடல் 416: பாவஞ் செய்யாமலின்றைக்கு

    He pleased to keep me - 610
                  (Tune 63 of ESB)

1. பாவஞ் செய்யாம லின்றைக்கு
    தேவரீர் காத்திடும்
    என்னி லென்றும் உம தாவி
    தந்து வசித்திடும்
   
2. எல்லாப் பாவத்தினின்றும் நீர்
    வல்லமையாய் மீட்பீர்;
    காத்துக் கொள்வீர் உம் தாசனை
    சாத்தான் தொடாமலே

3. ஜீவன் போம் வரையும் காக்கும்
    தேவன் நீரல்லவோ!
    சக்தியற்ற ஆத்துமாவை
    சக்தன் நீர் காத்திடும்!

4. நம்பி இதோ பணிகிறேன்
    உம் திருப் பீடத்தில்
    தீயனின் வினையினின்று
    நாயன் நீர் காத்திடும்!

5. உம் கரம் என் அடைக்கலம்
    அம்பரன் என் அரண்
    தற்காத்திடும் என் ஆத்துமாவை
    தற்பரா நீர் தாமே!
                             Charles Wesley

பாடல் 417: பாதம் ஒன்றே வேணும்


    இராகம்: குறிஞ்சி தாளம்: ஆதி

    பாதம் ஒன்றே வேணும் - இந்தப்
    பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்

    சரணங்கள்

1. நாதனே துங்கமெய் - வேதனே பொங்குதற்
    காதலுடன் துய்ய - தூதர் தொழுஞ்செய்ய - பாதம்

2. சீறும் புயலினால் - வாரிதி பொங்கிட
    பாரில் நடந்தாற்போல் - நீர்மேல் நடந்த உன் - பாதம்

3. வீசும் கமழ் கொண்ட - வாசத் தயிலத்தை
    ஆசையுடன் மரி - பூசிப் பணிந்த பொற் - பாதம்

4. போக்கிட மற்ற எம் - ஆக்கினை யாவையும்
    நீக்கிடவே மரம் - தூக்கி நடந்த நற் - பாதம்

5. நானிலத்தோர் உயர் - வான் நிலத்தேற வல்
    ஆணி துளைத்திடத் - தானே கொடுத்த உன் - பாதம்

6. பாதம் அடைந்தவர்க் - காதரவாய்ப் பிர
    சாதம் அருள் யேசு - நாதனே என்றும் உன் - பாதம்

பாடல் 418: காலமே தேவனைத் தேடு


    இராகம்: செஞ்சுருட்டி தாளம்: திரிபுட

    பல்லவி

    காலமே தேவனைத் தேடு - ஜீவ
    காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

    அனுபல்லவி

    சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு;
    சீரான நித்திய ஜீவனை நாடு

1. மன்னுயிர்க்காய் மரித்தாரே - மனு
    மைந்தனெனப் பெயர் வைத்திருந்தாரே
    உன் சிருஷ்டிகரை நீ உதயத்திலெண்ணு
    உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு - காலமே

2. சிறுவர்க ளென்னிடஞ் சேரத் - தடை
    செய்யா திருங்களென்றார் மனதார;
    பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
    பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் - காலமே

3. வேலை யுமக்குக் கைகூட - சத்ய
    வேதன் கிருபை வரத்தை மன்றாட;
    காலை தேடுவோரென்னைக் கண்டடைவாரே
    கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே - காலமே

பாடல் 419: இந்த நாள் எனக்கு


    இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ரூபகம்

    பல்லவி

    இந்த நாள் எனக்குத் தந்த நல் நாதா;
    சந்ததமும் நமோ சரணம்

    அனுபல்லவி
   
    வந்தென்னை யாளும் - வரந்தா இந்நாளும்
    வல்லா இத்தருணம்

    சரணங்கள்

1. பானொளி வீசுமுன் வானொளி என்னகம்
    தாவ கிருபை ஈவா
    பாதை காட்டிப் பல வாதை ஓட்டு மெந்தன்
    பாவநாச  தேவா - இந்த

2. பாழுடலின் செய்கை பதினேழினின்று
    பண்பாய்ப் பாதுகாரும்
    வாழுமாவியின் கனி ஒன்பதும் இன்று
    வர்த்தனையாய்த் தாரும் - இந்த

பாடல் 420: அஞ்சலோடு நெஞ்சுருகி


    இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ரூபகம்

    அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் - ஏழை
    ஆரென்றடியேனலறும் அபயம் கேள் ஐயா!

    சரணங்கள்

1. சஞ்சலம் தவிர்க்க உந்தன் தஞ்சமேயல்லால் - இத்
    தரணியில் யாதும் காணேன் தாரகம் நீயே - அஞ்சலோடு

2. நித்திரையில் விக்கினத்துட் புக்கிடாமலே - நின்
    சித்தம் வைத்தெனை ரட்சித்த தேவே ஸ்தோத்ரமே - அஞ்சலோடு

3. இன்றடியான் செய்யும் வேலை யாவிலு முந்தன் - நல்
    இன்ப ரூபம் தனை என் முன்பில் இயங்கச் செய்யுமேன் - அஞ்சலோடு

4. பார்வை பேச்சு கேள்வி சிந்தை யாவினாலுமே - வரும்
    பாவ தோஷங்கட்கு என்னைப் பாதுகாரையா - அஞ்சலோடு

5. ஆயனே அடியானுக்கு நாயன் நீரல்லால் - இம்
    மாய வாழ்வில் ஒன்றுமில்லை மாய்கை மாய்கையே - அஞ்சலோடு

பாடல் 421: அருணோதயம் ஜெபிக்கிறேன்


    இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி

    பல்லவி

    அருணோதயம் ஜெபிக்கிறேன்
    அருள் பரனே கேளுமேன்
    ஆவி வரம் தாருமேன் - என் இயேசுவே

    சரணங்கள்

1. கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமே
    கரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் - என் இயேசுவே
    சிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன் - அருணோதயம்

2. கதிரவன் எழும்பிவரும் முறையின்படி என்மேலே,
    கர்த்தரே நீர் பிரகாசித்திடும் - என் இயேசுவே
    நித்தம் நித்தம் பிரகாசித்திடும் - அருணோதயம்

3. மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலே
    ஆவிக்குள்ளடங்கச் செய்யுமேன் - என் இயேசுவே
    பாவிக்கருள் பெய்யச் செய்யுமேன் - அருணோதயம்

4. செய்யும் வேலை யாவுக்குமென் மா கிருபை வேணுமே
    இல்லாவிடில் நான் வெறுமையே - என் இயேசுவே
    எல்லாம் உம்மால் கூடும் உண்மையே - அருணோதயம்

5. வருகைக்கேற்ற ஆயத்தமும் மறுபிறப்பின் ஆவியும்
    மனமிரங்கித் தாருமேசையா - என் இயேசுவே
    தினமுமென்னைக் காருமேசையா - அருணோதயம்

6. அன்பு, பலம், தெளிந்த புத்தி, ஆவி வரந் தாருமேன்
    அடியேன் ஜெபம் ஏற்றுக் கொள்ளுமேன் - என் தேவனே
    அருமை மீட்பர் மூலம் கேட்கிறேன் - அருணோதயம்

பாடல் 422: கதிரவன் எழுகின்ற காலையில்


    இராகம்: நவ்ரோஜ் தாளம்: திரிபுட

    சரணங்கள்

1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
    துதி செய்ய மனமே நீ - எழுந்திராய்!

2. வறண்டு தண்ணீரற்ற வனம் இந்தப் புவிதனில்
    திரண்ட தயை தேவை -  நாடுவேன்

3. கடவுளின் வல்லமை கன மகிமை காணும்
    இடமதில்  செல்வதே - என் இஷ்டம்

4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
    ஆவலாய் நாடி நான் - போற்றுவேன்

5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
    நேயமாய்ப் பாடி நான் - உயர்த்துவேன்

6. மெத்தையில் இராச்சாமம் நித்திரை கொள்கையில்
    கர்த்தரின் செயல்களைச் சிந்திப்பேன்

7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்
    தொல்லைக்கு நீங்கியே - ஒதுங்குவேன்

8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ளுதவர்
    நேத்திரம் போல் என்னைக் காக்கிறார்
                                                                    T. ஜோசப் 

பாடல் 423: ஆரிடத்தினில் ஏகுவோம் எம் ஆண்டவனே


    இராகம்: சாவேரி தாளம்: ஆதி

    பல்லவி

    ஆரிடத்தினில் ஏகுவோம் எம் ஆண்டவனே
    ஆரிடத்தினில் ஏகுவோம்?

    அனுபல்லவி

    ஆரிடத்தில் ஏகுவோம் சோரா நித்திய ஜீவ
    நேரார் வசனங்கள் உமது சாரில் இருக்க இனி

    சரணங்கள்

1. பாவிகளாம் எங்களுக்கு - உமை யல்லாது
    தாபரமில்லை; நீரே!
    ஜீவன் தனையுடைய தேவ குமாரனாக
    மேவு கிறிஸ்தென்றுமையே - ஆவலுடன் நம்பினோம் - ஆரிடத்தினில்

2. போனவர் போல நாங்களும் - உமை நெகிழ்ந்து
    போவதில்லை பரமனே
    ஞானோபதேச குருவான உம்மையண்டின
    ஈனர் இனிதுற்ற உமது தானமதைப் பிரிந்து - ஆரிடத்தினில்

3. உற்றார் சிநேகர் யாரையும் - எம் வீடு வாசல்
    உள்ள பொருளனைத்தையும்,
    முற்றாய் வெறுத்தும்மையே பற்றியிருக்க நாங்கள்
    தெற்றாய் இனியும்மை நன்றியற்றோர் போல நெகிழ்ந்து - ஆரிடத்தினில்

4. பொன்னுலகத் திருந்தெம்மைப் - புரக்க வந்த
    புண்ய நாதன் நீரல்லவோ?
    பின்ன பேத மகற்ற மன்னவனே உமது
    நன்னய முகப் பிர-சன்ன மதனை விட்டு - ஆரிடத்தினில் 
                                                                                         ஜான் பால்மர்

பாடல் 424: தருணமே, பரம சரீரி


    இராகம்: அமிர்தவாகினி தாளம்: ஆதி
   
    பல்லவி

    தருணமே, பரம சரீரி - எனைத்
    தாங்கியருள் கருணை வாரி

    அனுபல்லவி

    உரிமை அடியார் அனுசாரி - உயர்
    எருசலை நகர் அதிகாரி - அதி

    சரணங்கள்

1. வரர் அடி தொழும் வெகு மானி - பரன்
    மகிமை ஒளிர் தேவ சமானி
    நரர் பிணை ஒரு பிரதானி - இயேசு
    நாயகன் எனதெஜமான் நீ - அதி - தருணமே

2. ஆதாரம் உனை அன்றி யாரே? - எனை
    அன்பாய்த் திருக்கண் கொண்டு பாரே;
    பாதாரவிந்தம் கதிசேரே - இஸ்ரவேல்
    பார்த்திபன் தாவீது வம்ச வேரே - அதி - தருணமே

3. நித்த நித்தமாக எந்தன் மேலே - வருவ
    தெத்தனை துன்பங்கள் ஒருக்காலே;
    அத்தனையும் நீக்குதற்குன் காலே - எனக்
    குத்தம துணை தான் மனுவேலே - அதி - தருணமே

4. கங்குல் பகலும் துயரம், கோவே - வரும்
    கலக்கம் ஒழித்தெனைத் தற்காகவே;
    பங்கெனக்குத் தந்த மெய் மன்னாவே - ஏழைப்
    பாவியை இரட்சியும் இயேசு தேவே - அதி - தருணமே
                                                                                     வே. சா