Sunday, November 28, 2010

பாடல் 501: ஆசி தா வேதா!

    இராகம்: கல்யாணி தாளம்: ரூபகம்

    பல்லவி

    ஆசி தா வேதா! - சந்தத

    அனுபல்லவி

    பிரகாச நேச வாசப் பிரதிஷ்டை
   
    சரணங்கள்

1. ஐயனே! அடியாரெம்மாத்ரம் ஆலயம் செய்ய அபாத்ரம்!
   மெய்யனே! தயை செய்தீர் ஸ்தோத்ரம்! மேன்மைக்காக
வாய்மை கீர்த்தனம் - ஆசி

2. அந்தி சந்தி வேளை வந்து ஆராதனை செய்வோர் நன்று;
    வந்தித் துந்த னன்பு கொண்டு மாஷி தோன்ற சாஷி விளம்ப - ஆசி

3. இரத்தந் தீயின் நேசம் விளங்க சத்துரு பிசாசு கலங்க,
    வெற்றி அல்லேலூயா முழங்க வீரங்காட்டும் தீரரிலங்க - ஆசி

4. பஞ்ச நோய் துயர்கள் நீத்து பாரில் பாவம் நீக்கிக் காத்து;
    நெஞ்சங்கோவிலாகத் தீர்த்து நேயரே அதில் வசித்து - ஆசி

5. போதகர்க்கும் மாவியூற்றி புண்யபதேசங்காட்டி;
    மா தயாளன் வாஞ்சையூட்டி மகிமையா யுன் வீட்டை
                                                                     நாட்டி - ஆசி
                                                                      K.S Abraham

No comments:

Post a Comment