Tuesday, November 30, 2010

பாடல் 486: ஞான மணவாளனே

     இராகம்: "கேள் ஜென்மித்த ராயர்க்கே"

1. ஞான மணவாளனே
    இன்றிங்கே நீர் வாருமே
    ஞான மணவாட்டியை
    உந்தன் கரமேந்துமே
    மேசியா இயேசரசே
    ஆசீர் ஈயும் மீட்பரே
    இம்மண நல் நாளிலே
    இன்பம் ஈயும் கர்த்தரே
   
2. கானாவூர் மணவீட்டில்
    வானாகரம் ஈந்தவா
    இம்மண மக்கள் மீதும்
    வானாசீர் ஈந்திடும்
    சங்கீதம் முழங்கிட
    மங்கள முண்டாக்கிட
    இம்மண நல் நாளிலே
    இன்பம் ஈயும் கர்த்தரே

3. ஆதாம் ஏவாள் போலிவர்
    ஆனந்தமாய் வாழ்ந்திட
    சாந்தம், தயை, பொறுமை
    தானதர்மம் அன்புடன்
    மக்கள் செல்வமுடனே
    நீடூழியாய் வாழவே
    இம்மண நல் நாளிலே
    இன்பம் ஈயும் கர்த்தரே
                                                   J.Immanuel

No comments:

Post a Comment