Sunday, November 28, 2010

பாடல் 502: ஆரணா திபா தேவா மூவா

    இராகம்: சரஸ்வதி மனோகரி தாளம்: ஆதி

    பல்லவி

   ஆரணா திபா தேவா மூவா - அன்பர்க்கருள் தா
   ஆசியருள்வாய் அன்பர்க்கருள் தா

   அனுபல்லவி

   பூரணா உந்தன் பொற் பாதந் தொழ
   ஆலயம் அமைத்தோம் ஐயனே நீ வா வா

   சரணங்கள்

1. பாவிகள் உமக்கு ஆலயம் செய்ய
    பாத்திரர்களாமோ பாவநாசரே
    பரிகரித்தே எங்கள் பாவங்கள்
    பார்த்திபா வருவாய் தேவ ஆலயத்தில் - ஆரணா

2. அல்லும் பகல் எல்லாம் ஐயனே உன் கண்கள்
    இந்த ஆலயத்தை நோக்கியே இருக்க
    நொந்த பாவிகள் வந்து ஜெபிக்க
    எந்தையே நீர் கேட்டு இரங்கியருள்வீர் - ஆரணா

3. ஸ்தோத்திரம் ஜெபமும் தியானம் நல் பிரசங்கம்
    பார்த்திபா இந்த ஆலயந் தனில்
    கீர்த்தியுடனே கீதம் பாடவே
    நேர்த்தியாம் உன் நாமம் நிலைத்தென்றும் ஓங்க - ஆரணா

4. பாவியினிதயம் உந்தன் ஆலயம்
    பாவம் போக்கி நல்ல பக்தியோடுமே
    அன்பு சாந்தம் அதில் விளங்க
    ஆராதிப்போர் நெஞ்சை ஆலயமதாக்கும் - ஆரணா

No comments:

Post a Comment