'ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே' என்ற மெட்டு
பல்லவி
துலங்கிடவே தூயன் திரு நாமமே
இலங்கிடுதே சேனை ஆலயமே
இனிதுடன் திகழுமித் தினமிதிலே
கனிவுடன் எழுந்திடுவீர்!
அனுபல்லவி
ஆலயமே! நம் ஆனந்தமே - வல்ல
அற்புத தேவனின் மாளிகையே
பாவிகளின் நல் புகலிடமே
பரிசுத்த அலங்காரமே
சரணங்கள்
1. சாலொமோன் ஆலயம் சிறந்திடவே
சகல மகிமையும் நிறைந்திடவே
மேகம் போல் வந்தவா! வல்லமையாய்
இவ்வாலயம் சிறந்திட வா! - ஆலயமே
2. துதித்திடுவோம் நம்மில் வசித்திடுவார்
பசிதாகம் இனியில்லை மேய்த்திடுவார்
ஜீவத் தண்ணீரண்டை நடத்திடுவார்
கண்ணீரைத் துடைத்திடுவார் - ஆலயமே
3. ஆலயத்தை பாதுகாத்திடுவோம்
அளவிலா நன்மைகளடைந்திடுவோம்
உறுதியான தூணாய் நிலைத்திடுவோம்
பயத்துடன் பணிந்திடுவோம் - ஆலயமே
4. வானாதி வானங் கொள்ளாத தேவா! இவ்
வாலயம் உமக்கொரு தாபரமே
வாசங் கொள்வீர் எம துள்ளத்திலே
வந்திடுவீர் இயேசுவே! - ஆலயமே
(சங் 122:1) (I இரா 6:3, 17) (2 நாளா 6:33-53) (சங் 93:5) (I இரா 8:10-11) (2 நாளா 7:1-2) (எசே 43:5) (ஆகா 2:7) (வெளி 7:15,16,17) (நெகே 10:39) (சங் 122:9) (வெளி 8:12) (சங் 5:7) (2 நாள் 6:19) (2 கொரி 6:16,19)
No comments:
Post a Comment