பத்துக் கட்டளைகள்
சரணங்கள்
1. எல்லாம் படைத்த சர்வ
வல்லவ னொன்றே - அல்லா
தில்லை மரம் கல்லைத் தெய்வ
மென்று தொழாதே
2. நல்லான் அவரைத் தொழு
செல்வந் தழைக்கும் - பொல்லா
நாசப் பேய் வணக்கம் நித்ய
மோசம் விளைக்கும்
3. வீணாகத் தெய்வ நாமம்
வீண் டிகழாதே - நன்கு
வேதம் படி ஓய்வுநாளில்
வேலை செய்யாதே
4. கோணாமல் தந்தை தாயைப்
பேணிக் கனஞ்செய் - பொங்கு
கோபம் கொலை வேசித்தனம்
பாவ மிவை மெய்
5. களவை யகற்று கள்ளச்
சாட்சி சொல்லாதே - மனங்
காய்ந்து பிறன் பொருள் மேலே
காதல் கொள்ளாதே
6. எந்தவாறுனக்குப் பிறன்
செய்யவேண்டுமோ - முற்றும்
அந்தவாறு தவறா
தவனுக்கும் நீ செய்
7. துய்ய நீதிக்குத் திருப்தி
செய்து மரித்த - கிறிஸ்
தையர் பாதம் அண்டு வேற
டைக்கலமில்லை
No comments:
Post a Comment