Friday, November 26, 2010

பாடல் 511: ஆர்ப்பரித்திடுவோமே

     "ஆனந்தம் ஆனந்தமே" என்ற மெட்டு

     பல்லவி

    ஆர்ப்பரித்திடுவோமே, நம் ஆண்டவர் இயேசுவையே
    இந்தியா இரட்சணிய சேனையின்
    நூற்றாண்டு விழா இதனில்

    அனுபல்லவி

    பரமன் தயவால், ஊழியம் பெருகி
    பரம்பிடக் கிருபை கூர்ந்தார்

    1. ஆயிரத்தெண்ணூற்றி எண்பத்தி இரண்டிலே
        செப்டம்பர் பத்தொன்பதில் - சேனை யூழியர் நாலுபேரால்

    2. பாரதப் பூமியிலே, பம்பாய்க் கப்பல் துறையில் வந்த
        தேவ பக்தன் பக்கீர் சிங்குமாய் பம்பாயில் வேலை யாரம்பித்ததே

    3. சென்ற நூற்றாண்டுகளாய், நம் சேனை இந்தியாவிலே - தூய
        சேவை பெருகிடவே, செய்த தேவனுக்கே மகிமை

    4. சேனைக் கொடி பிடித்தே, வந்த தேவ தூதுவர்களால்
        செய்த சேவையை ஊக்கமுடன் செய்து இயேசுவைப் பின் தொடர்வோம்
                                                                     Major K. Solomon

No comments:

Post a Comment