Friday, November 26, 2010

பாடல் 514: என் ஆண்டவா, உம் வானம் பூமி ஆழி

    HOW GREAT THOU ART O Lord My God ESB: 37 
                    (Tune 544 of ESB)

1. என் ஆண்டவா, உம் வானம் பூமி ஆழி
    எங்கெங்கிலும் உம் சிருஷ்டிப்பைக் காண்பேன்
    குமுறும் மேகம், மின் இடி, வான் வெள்ளம்
    உம் மகிமை, உம் வல்லமையாமே

    பல்லவி

     என் உள்ளம் பொங்கிப் பொங்கிப் பாடுவேன்
     நீர் வல்லவர்! மாவல்லவர்

2. வான் எட்டும் மாமலை, மீதேறி நின்று
    நற்சோலைக் காடு பள்ளத்தாக்குகள்
    நீரோடைகள், மாநதிகள் எங்கிலும்
    காண்போமே  பட்சிகள் நற்கன்றுகள் - என் உள்ளம்

3. மாவல்ல தந்தையே, உம் ஏக மைந்தன்,
    தந்தீரே நாங்கள் மீட்பைப் பெறவே
    என் பாவப்பாரம் தாங்கினவரே
    சிலுவையில் தன் ஜீவன் விட்டாரே - என் உள்ளம்

4. ஆர்ப்பரிப்போடு மீட்பர் வருவாரே
    சேர்ப்பார் இவ்வடியேனை மோட்சத்தில்
    ஆர்ப்பரிப்போமே, நாங்களும் தாழ்மையாய்
    மா வல்லவர் என்று பிரஸ்தாபிப்போம் - என் உள்ளம்

No comments:

Post a Comment