விசுவாசப் பிரமாணப் பாட்டு
DOCTRINAL SONG
பல்லவி
விசுவாசமே, வேத பிரமாணமே - நம்
இரட்சண்ய சேனையின் விசுவாசமே - இது
பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும்
அடங்கிய சத்திய வேதாகமமே
சரணங்கள்
1. தேவ ஏவுதலால், அருளப்பட்டதென்றும்
கிறிஸ்தவ விசுவாச கிரியையுமான
தெய்வீகச் சட்டம் அடங்கினதென்றும்
மெய்யாகவே விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே
2. எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகராயும்
பாதுகாவலரும், ஆள்பவருமான
வணக்கத்திற்குரிய பூரண தேவன்
ஒருவரே என விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே
3. தத்துவம் தன்னில் பிரியாதவரும்
3. தத்துவம் தன்னில் பிரியாதவரும்
வல்லமை மகிமை சமமான
பிதா, குமாரன் பரிசுத்த ஆவி
திரித்துவரென விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே
4. கர்த்தராம், கிறிஸ்துவின் மனுஷீக தெய்வீக
தன்மைகள் அடங்கி இருப்பதனால்
மெய்யாக தேவனாய், மெய்யாக மனிதனாய்
இருக்கிறார் என விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே
5. ஆதிப்பெற்றோர்கள் நிர்மலராக
சிருஷ்டிக்கப்பட்டு கீழ்ப்படியாது
பரிசுத்தம் இழந்து பரமனின் கோப
ஆக்கினையடைந்தார் விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே
6. விருப்பமுள்ளோ ரெவராயினும் அவர்கள்
6. விருப்பமுள்ளோ ரெவராயினும் அவர்கள்
இரட்சிப்படைய கர்த்தர் கிறிஸ்தேசு
பாடு மரணத்தால் - பாரிதை மீட்க
பலியானார் என விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே
7. தேவனுக்கு முன் மனஸ்தாபமுடன்
7. தேவனுக்கு முன் மனஸ்தாபமுடன்
இயேசு கிறிஸ்துவில் விசுவாசமும்
பரிசுத்த ஆவியால் வரும் மறுபிறப்பும்
இரட்சைக்குத் தேவை விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே
8. கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தால்
கிருபையால் நீதிமான் ஆகின்றோம்
அவரில் விசுவாசித்தால் தன்னிலே அந்த
சாட்சி உண்டென்று விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே
9. இரட்சிப்பில் நிலைத்தல் கிறிஸ்துவிலுள்ள
இடைவிடா விசுவாசம் கீழ்ப்படிதல்
இவைகளில் சார்ந்து இருக்கிறதென்று
இதயமதில் விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே
10. பூரண சுத்தி, விஸ்வாசியின் சிலாக்கியம்
கர்த்தராம் கிறிஸ்து வருமளவும்
ஆவி, ஆத்மா, சரீரம் அழுக்கற
காக்கப்படும் விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே
11. அழியாது ஆத்மா உயிர்த்தெழும் சரீரம்
அகிலம் முடிவில் நியாய விதி உண்டு
நீதிமானின் ஆனந்தம் துன்மார்க்கரின் ஆக்கினை
நித்தியம் என விசுவாசிக்கின்றோம் - விசுவாசமே
No comments:
Post a Comment