Tuesday, November 30, 2010

பாடல் 486: ஞான மணவாளனே

     இராகம்: "கேள் ஜென்மித்த ராயர்க்கே"

1. ஞான மணவாளனே
    இன்றிங்கே நீர் வாருமே
    ஞான மணவாட்டியை
    உந்தன் கரமேந்துமே
    மேசியா இயேசரசே
    ஆசீர் ஈயும் மீட்பரே
    இம்மண நல் நாளிலே
    இன்பம் ஈயும் கர்த்தரே
   
2. கானாவூர் மணவீட்டில்
    வானாகரம் ஈந்தவா
    இம்மண மக்கள் மீதும்
    வானாசீர் ஈந்திடும்
    சங்கீதம் முழங்கிட
    மங்கள முண்டாக்கிட
    இம்மண நல் நாளிலே
    இன்பம் ஈயும் கர்த்தரே

3. ஆதாம் ஏவாள் போலிவர்
    ஆனந்தமாய் வாழ்ந்திட
    சாந்தம், தயை, பொறுமை
    தானதர்மம் அன்புடன்
    மக்கள் செல்வமுடனே
    நீடூழியாய் வாழவே
    இம்மண நல் நாளிலே
    இன்பம் ஈயும் கர்த்தரே
                                                   J.Immanuel

பாடல் 487: தம் பாலர்களோடு

    When mothers of Salem - 797
                (Tune - 737)

1. தம் பாலர்களோடு,
    மா நகர் சாலேம் தாய்மார்
    சேர்ந்தொன்றாய் வர சீஷர்கள்
    போய்விடச் சொன்னாரே;
    நல் மீட்பர் அதைப் பார்த்தனர்
    தயாளத்தோடு கூறினர்,
    'சிறியோரை என்னண்டையே சேரவிடும்'
   
2. இப்பாலரை ஏந்தி
    மார்போடணைத்துச் சேர்த்து
    என் ஆட்டுக்குட்டி யாக்குவேன்
    நீர் தடுக்க வேண்டாம்
    தம் நெஞ்சை எனக் கொப்பித்தார்,
    என்னோடு மகிழ்ந்திருப்பார்;
    'சிறியோரை என்னண்டையே சேரவிடும்'

3. அச்சிறுவர் மீதில்
    மா பாசம் காட்டினாரே,
    அவ்வன்பை இன்னும் அறியார்
    மா திரள் பாலர்கள்;
    வேதோபதேசம் உணரார்,
    இவ்வருள் வாக்கை அறியார்
    'சிறியோரை என்னண்டையே சேரவிடும்'

4. இத்தேசத்துப் பாலர்
    பேரன்பைக் கேட்பாராக
    நீர் சொன்னப்படி யாவரும்
    மெய்யொளி காணட்டும்
    உம் அருள் ஜோதி வீசிடும்
    தெய்வன்பை நன்றாய்க் காட்டிடும்
    'சிறியோரை என்னண்டையே சேரவிடும்'
                                                                              William Medlen Hutchings

பாடல் 488: சாந்தமுள்ள இயேசுவே

     Gentle Jesus meek and mild - 793
                     (Tune - 283)

1. சாந்தமுள்ள இயேசுவே
    பாலர் முகம் பாருமேன்;
    என்னில் தயை கூருமேன்
    என் உள்ளத்தில் தங்குமேன்

2. உம்மை நாடிப் பற்றுவேன்
    என்னை ஏற்றுக் கொள்ளுமேன்;
    மோட்ச ராஜியத்திலே
    எனக்கிடம் தாருமேன்

3. இன்ப முகம் காட்டுவீர்
    என்னைக் கையில் ஏந்துவீர்;
    உமக்கேற்றோன் ஆகவே
    சுத்தம் பண்ணும் இயேசுவே

4. தீயோர் செய்கை யொன்றுமே,
    நான் செய்யா திருக்கவே
    என்னை ஆண்டு நடத்தும்,
    என்னில் வாசமாயிரும்

5. ஆ அன்புள்ள இயேசுவே
    அடியேனைப் பாருமே;
    என்னை அன்பாய் ரட்சியும்
    மோட்ச பாக்யம் அருளும்
                                               Charles Wesley

பாடல் 489: எந்தையே கெஞ்சுகின்றோம்

    "This child we dedicate to Thee"
                     (Tune - 147)
     இராகம்: சாந்தமுள்ள இயேசுவே தாளம்: திரிசடை

1. எந்தையே கெஞ்சுகின்றோம்
    இந்த சிறு பிள்ளைக்காய்
    உந்த னருளால் இதை
    எந்த நாளும் காருமேன்

2. இந்தப் பிள்ளை என்றுமே
    உந்தன் சித்தஞ் செய்துமே;
    சந்ததம் நற்சீலமே
    சாலப் பெறச் செய்யுமேன்

3. நாங்களு மெம் நாதனே,
    பாங்கா யுமைப் பின்செல்ல;
    நீங்கா தெம்மோடிருந்து,
    நித்தம் காரும் தேவனே
                                                  K.S. Abraham

பாடல் 490: இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும்

   இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி
   
   பல்லவி

   இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும் கர்த்தாவே!

   அனுபல்லவி

   உந்தனுக் கிந்தருணம் சொந்தமாய் ஒப்புவிக்கும்
  
   சரணங்கள்
 
1. சேனை வீரனாய் வந்து ஈன சாத்தானை வென்று
    ஞான புதல்வனாய் எந்நாளும்  உமைத் துதிக்க - இந்த

2. பொய், வஞ்சம், வன்மம், பகை பொல்லாக் குண மணுகா
    மெய்யன்பு சத்யம் நேசம் விளங்கி என்றுமொழுக - இந்த

3. இரட்சிப்பின் சத்தியத்தை எத்திசையிலுங் கூறும்
    சுத்த நல் வீரனாக இத்தரையில் விளங்க - இந்த

4. சஞ்சலம், துயர், துக்கம் மிஞ்சும் தருணத்திலும்
    நெஞ்சிலும் நின் பஞ்ச காயம் தஞ்ச மென்றுன்னைச் சார - இந்த

Monday, November 29, 2010

பாடல் 491: கர்த்தர் எக்காளம் கடைசிக் காலத்தில்

    When the trumpet of the Lord shall sound - 907
                                (Tune 853)

1. கர்த்தர் எக்காளம் கடைசிக் காலத்தில் தொனிக்கையில்
    நித்யமாய் பகல் வெளிச்சம் வீசிட;
    பாரில் இரட்சை பெற்றோர் இன்பக்கானானின் கரைதாண்ட;
    பேரழைக்கும் நேரம் நானும் அங்குண்டு

    பல்லவி

    பேரழைக்கும் நேரம் நானும் (3)
    பேரழைக்கும் நேரம் நானும் அங்குண்டு!

2. கிறிஸ்துவில் நித்திரையுற்றோர் அப்பிரகாசக் காலையில்
    கிறிஸ்தின் மகிமை பெற உயிர்த்திட
    பக்தர் தம் நித்திய மோட்ச வீடு தனைச் சேரையில்
    பேரழைக்கும் நேரம் நானும் அங்குண்டு! -  பேரழைக்கும்

3. கர்த்தர் பேர்க்காய் இராப்பகல் கடினமாயுழைப்போமே
    இத்தரையோர்க் கவர் அன்பைச் சொல்வோமே;
    பாரதில் என் வேலை தீர்ந்து ஜீவன் விட்டு நீங்கையில்
    பேரழைக்கும் நேரம் நானும் அங்குண்டு! -  பேரழைக்கும்
                                                                       James M Black

பாடல் 492: நம் நேசரை அங்கே சந்திப்போம்

     We shall meet our loved ones there

1. நம் நேசரை அங்கே சந்திப்போம்
    அங்கே கண்ணீர் சிந்தப்படாதே;
    மெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!
    பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது

    பல்லவி

    மரண இருளின் பள்ளத்தாக்கிலே நாம்
    சமாதானத்தோடு நடப்போம்;
    மெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!
    பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது

2. நம் மீட்பரை அங்கு காணுவோம்
    துன்பம் துக்கம் ஒன்றும் அங்கில்லை
    மெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!
    பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது - மரண

3. அவர் பாடல் நாம் அங்கே பாடுவோம்
    அவரால் நாம் இரட்சிப் படைந்தோம்;
    மெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!
    பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது - மரண

4. ஜெய வீரராய் அங்கு ஆளுவோம்,
    யுத்தம் செய்து வெற்றி பெறுவோம்;
    மெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!
    பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது - மரண  

5. நாம் இயேசுவின் பாதம் சேர்த்திட்ட
    பாவிகளை அங்கே சந்திப்போம்;
    மெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!
    பள்ளத்தாக்கை நாம் கடக்கும்போது - மரண 
                                                                Freed W Fry    

பாடல் 493: பூலோக வாழ்வு முடிந்து

    Happy soul, thy days are ended

1. பூலோக வாழ்வு முடிந்து
   மேலோகம் போ! ஆத்மாவே!
   தேவ தூதர் படை சூழ
   தேவ குமாரன் முன்னே

   பல்லவி

    சந்திப்போம் சந்திப்போம்,
    சந்திப்போம் சந்திப்போம்
    சந்திப்போம் ஆற்றின் கரையிலே
    அங் கலைகள் புரளா

2. உன் ஆவியை ஏற்றிடவே,
    உன் இரட்சகர் நிற்கிறார்;
    அன்பின் கிரீடம் உனக்காக
    அன்பர் வைத்திருக்கிறார்

3. இரட்சகரின் மார்பில் சேர்ந்து
    இரட்சிப்பை நீ பெற்றிடு;
    நித்திய இளைப்பாறல் ஈவார்
    நித்தம் சந்தோஷிப்பார்

4. வேதனையை சகித்திட்டால்
    நாதனோடரசாள்வாய்;
    மரித்தும் நீ ஜீவிப்பாயே,
    பரிசுத்தன் பலத்தால்

Sunday, November 28, 2010

பாடல் 494: இரட்சை இயேசுவின் கையில்

     Safe in the arms of Jesus - 889
                  (Tune 261)

1. இரட்சை இயேசுவின் கையில்
    இரட்சையவர் மார்பில்,
    நிச்சயமா யென் னாத்மா
    பெற்று என்றுந் தங்கும்
    கேளிது தூதர் சப்தம்!
    கீதமாய்ப் பாடுகிறார்
    மேலோக மாட்சிமையில்
    மகிழ்ந்து சாற்றுகிறார்

    பல்லவி

   இரட்சை இயேசுவின் கையில்
   இரட்சையர் மார்பில்
   நிச்சயமா யென் னாத்மா
   பெற்று என்றுந் தங்கும்

2. இரட்சை இயேசுவின் கையில்
    அச்சம் எனக்கில்லை,
    பரீட்சை யாவும் ஜெயம்
    பாவ மணுகாதே,
    பயம், சந்தேகம், துக்கம்,
    யாவுமே நீங்கிவிடும்;
    பாடு இன்னம் சொற்பமே
    பார் கண்ணீர் அற்பமே

3. இயேசு என்னடைக்கலம்,
    இயேசெனக்காய் மாண்டார்.
    பிளவுண்ட மலையை
    பற்றினேன் பலமாய் நீங்கி
    இருள் முற்றுமாய் நீக்கி
    அருள் மோட்சத்தண்டை
    அருணோயதயங் காண
    காத்திருப்பேனே நான்
                                      Fanny Crosby

பாடல் 495: ஆனந்தமே இது ஆனந்தமே

     சரணங்கள்

1. ஆனந்தமே இது ஆனந்தமே - தோழர்
    ஆனந்த நாட்டிற்கு ஏகினாரே;
    நம்மைப் பிரிந்தது நஷ்டமென்றாயினும்
    அன்னவர் லாபம் அளவற்றதே

2. லோகப் பிரயாசம் நீங்கினது - அவர்
    ஆத்ம கிலேசங்கள் மாறினது,
    மேலோக ஏதேனில் வாழ்ந்திடச் சென்றிட்ட
    ஆவியை நாமும் பின் சென்றிடுவோம்

3. சென்றடைந்தார் அவர் ஆக்கியோன் சந்நிதி,
    ஆகாய வாகனம் ஏறிச் சென்றார்;
    தோழரை விட்டுப் பிரிந்து சென்றார் - அவர்
    காற்றும் புயலுங் கடந்து சென்றார்

4. இளைப்பாறுதல் தேசம் தீவிரமாய்ச் சேர்ந்தார்,
    தொல்லைகள் சூழ்ந்த இந்நாட்டை விட்டு;
    நம்பிக்கையும் சமாதானமும் அங்குண்டு,
    துக்கமும் பாவமும் அங்கேயில்லை

5. இரட்சகரோடிங்கு சஞ்சரித்தவர்கள்,
    எல்லாவரும் அங்கு கூடிடுவர்;
    மாறி மாறி அவர் வாழ்த்துதல் கூறிப்பின்
    ஆர்ப்பரிப்போ டவர் ஆனந்திப்பார்

6. கஷ்டத்தின் மேலும் மரணத்தின் மேலும் - பேர்
    வெற்றி பெற்ற பெருங் கூட்டரவர்;
    லோக ஆசை முற்றும் தீர்ந்து அவர் அங்கு
    நித்திய காலம் சுகித் திருப்பார்

பாடல் 496: பேரழைக்கும் வேளை வான சேனை கூடுமே

    சரணங்கள்

1. பேரழைக்கும் வேளை வான சேனை கூடுமே - அங்கே
    பே ரொலி கீதத்தில் நானும் பங்கடைவேனே

2. தூதர்கள் மேலோகந்தனில் பேரழைக்கவே - நானும்
    வேதனை யில்லாவுலகில் போ யடைவேனே

3. மேலுலகில் பேரழைக்க நானும் நின்றங்கே - தேவா
    மேன்மைப் பங்கடைய "இதோ வந்தேன்" என்பேனே

4. விண்ணுலகில் பேரழைக்க முன்னணி சென்று - எந்தன்
    புண்ய நாதனோடு வாழ்ந்து கண்யமடைவேன்

பாடல் 497: இன்பலோக யாத்திரையோர் நாம்

     Shall we meet beyond the river!
                    (Tune 271)

1. இன்பலோக யாத்திரையோர் நாம்
    அங்கே பாவ மில்லையாம்;
    அங்கே வீரர் ஆர்ப்பரிப்பார்
    அங்கே கண்ணீ ரில்லையாம்

    பல்லவி

    ஜீவ ஆற்றின் கரையில்
    சந்திப்போம் சந்திப்போம்;
    ஜீவ ஆற்றின் கரை யோரம்,
    போர் முடிந்ததின் பின்பு

2. நண்பர் நாம் இங்கே பிரிவோம்,
    அன்பரும் சாகுவாரே;
    ஆனால் திரும்பக் கூடுவோம்
    ஜீவ ஆற்றின் கரை யோரம்

3. இங்கே யுத்தத்தில் நிலைப்போர்
    அங்கே கிரீடம் பெறுவார்;
    இங்கே துன்பங்கள் சகிப்போர்,
    இன்பக் கீதம் பாடுவார்
                      Horace Lorenzo Hastings

பாடல் 498: சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்

     God be with you, till we meet again - 954
                                    (Tune 292, 506)

1. சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,
    நிலைத்திரு நீ அவரில்;
    யுத்தம் முடிந்து மேல் வீட்டில்,
    சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,

    பல்லவி

    சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,
    மீட்பர் பாதம் சந்திக்கும் மட்டும்,
    சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,
    கர்த்தர் காப்பார் சந்திக்கும் மட்டும்

2. சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,
    ஞானமாய் உனை நடத்தி,
    மோசத்திற் குன்னை விலக்கி
    சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்

3. சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,
    சிறகின் கீழ் உன்னைக் கூட்டி;
    மன்னாவாலே உன்னை ஊட்டி,
    சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்
                                 Jeremiah Eames Rankin

பாடல் 499: சலாம் தோழர் சலாம்

    பல்லவி

    சலாம் தோழர் சலாம்
    சலாம் போறேன் சலாம்
    சந்திப்பீரா மோட்சத்திலே?
    சலாம் சலாம் சலாம்!

    சரணங்கள்

1. யுத்தம் வேறே யிடம்
    நித்தம் மீட்பருக்காய்;
    சித்தத்துடன் செய்யப்போறேன்
    கர்த்தன் பலத்தினால் - சலாம்

2. பாவி மீட்பர் பாதம்
    தாவியே வந்திட;
    சுத்தமாய் ஜீவிப்போம் முற்றும்
    இத்தரையிலே நாம் - சலாம்

3. யுத்தம் முடிந்த பின்,
    நித்தமும் வாழுவோம்;
    கர்த்தன் இயேசுவின் பலத்தால்,
    நித்யானந்தத்திலே - சலாம்

பாடல் 500: மூலைக்கல் நம் கிறிஸ்து

      ஆலய பிரதிஷ்டை
     (Christ is our Corner Stone - 940) (Tune 221 or 231)

1. மூலைக் கல் நம் கிறிஸ்து
    அவரில் கட்டுவோம்
    பரலோக சபை
    பரிசுத்தர் கூட்டம்
    அவர் அன்பில் விஸ்வாசிப்போம்
    மேலோக ஆனந்தம் ஈவார்

2. ஸ்துதித்துப் பாடுவோம்
    திரியேகர் நாமத்தை;
    அவர் புகழ்ச்சியை
    வானம் பூமி கேட்க
    ஆனந்தக் களிப்புடனே,
    அவரை வாழ்த்திப் பாடுவோம்

3. கருணைக் கடலே
    கடாட்சித் தருளும்;
    எம் பொருத்தனைகள்,
    எல்லாம் ஏற்றுக் கொள்ளும்.
    மாரிபோல் உம் கிருபைகள்
    தாரும் உம் அடியார்க்கு
                        John Chandler