பல்லவி
தேவே கண்ணோக்குமேன் - என்
தீய நெஞ்சை மாற்றுமேன்!
அனுபல்லவி
கோவே! உம்மைப்போல என்னை
கோதற்றவனாக்கும் மாசற்று ஜீவிக்க
சரணங்கள்
1. உள்ளம் நொந்து உம்மண்டை யான்
உருகி வாறேனையனே
தள்ளாடு மென் நெஞ்சைத் தேற்றி
தாங்கிக் காருந் தேவா - பாந்தமா யெந்தனை - தேவே
2. நொந்துடைந்த எந்தன் மனம்
உந்தனுக்கு குகந்ததே
தந்தையே! எனைத் தள்ளாது
சொந்தமா யாக்க நான் கெஞ்சுகிறேன் நாதா! - தேவே
3. ஆத்மா தேகம் ஆவியும் என்
அன்பனே படைக்கிறேன்
பாத்திரமான பலியாய்
ஏற்று நீர் காத்திடும் நேத்திரம் போலென்னை! - தேவே
K.S. Abraham
No comments:
Post a Comment