Tuesday, November 22, 2011

பாடல் 207: நேச இயேசுக்காக யாவையும் செய்வேன்


      Anything For Jesus
        (Tune 199 of ESB)

    இராகம்: இயேசு நேச மீட்பா - 205

1. நேச இயேசுக்காக யாவையும் செய்வேன்
    என்ன நேரிட்டாலும் பின்வாங்க மாட்டேன்
    நற் போர் வீரனைப் போல் நிலைத்து நின்று
    நேசர் கற்பனைகள் கைக்கொள்ள என்றும்

    பல்லவி

    இயேசுக் கென்று யாவும்
    செய்வேன் நான் பின்வாங்கேன்;
    நேச இயேசுக்காக
    எங்கும் நான் செல்வேன்

2. யாவையும் வெறுத்தேன் என் இயேசுவுக்காய்
    ஆவலாய்ச் சிலுவை எங்கு மவர்க்காய்
    சுமந்து பின்செல்ல எந்தன் ஜீவ நாள்
    பூசை இதோ தேவே! எப்போதும் நீ ஆள்! - இயேசு

3. எந்தக் காரியமும் உண்மையாய்ச் செய்வேன்
    என்ன நேரிட்டாலும் மெய்யாய் சகிப்பேன்
    பாவ அடிமைகள் இரட்சிப்படைய
    தளரா வைராக்கியம் தந்திடும் என்னில் - இயேசு

No comments:

Post a Comment