Tuesday, November 22, 2011

பாடல் 211: உம்மை நேசிப்பேன் உரித்தாய்


    Let me love thee - 503
           (Tune 439 of ESB)

1. உம்மை நேசிப்பேன் உரித்தாய்
    உள்ளம் அனைத்தும் கேட்டீர்;
    தருவேன் உயிரோடெல்லாம்
    என் நேசத்தை மூட்டுவீர்!
    நீர் மகிழ்ந்திட சுமக்கும்
    பாரம் லகுவாயிடும்;
    உம் சமூகம் எத்துக்கமும்
    இன்பமாக மாற்றிடும்!

    பல்லவி

    மீட்பா! உம்மை என்றும்
    நேசிக்கும் என்னுள்ளம்
    உந்தன் தயை ஒன்றே
    என் ஆவியைத் தேற்றும்!

2. உம்மை நேசிப்பேன் காட்டும் உம்
    மகத்துவ வல்லமை!
    கல்வாரிக் காட்சியால் மாற்றும்
    என் சந்தேகங்களையே!
    பாவத்தால் வந்த வெட்கத்தை
    உமதன்பு பார்க்கலை!
    எனக்கு மன்னிப்பளிக்க
    ஏற்றீர் எத்தனை வாதை! - மீட்பா

3. உம்மை நேசிப்பேன் என் உள்ளம்
    களிகூரும் அப்போதான்!
    இன்பத்திலும் துன்பத்திலும்
    உம்மண்டை ஒதுங்குவேன்!
    நேசத்தால் துக்கங் குறையும்!
    நேசத்தால் கவலை போம்!
    நேசம் திகையாது நம்பும்!
    நேசம் துணிந்து வெல்லும் -
மீட்பா
                                       Herbert H. Booth

No comments:

Post a Comment