Wednesday, November 16, 2011

பாடல் 235: எந்தன் விசுவாசம் உமை


    இராகம்: இந்துஸ்தானி தாளம்: ரூபகம்
             (வருபாவியை என்ற மெட்டு)

1. எந்தன் விசுவாசம் உமை
    நோக்கு தேசு தேவே!
    உந்தன் ஆசிதனையே வேண்டி
    ஓயுதில்லை கோவே!

2. என் நம்பிக்கை சிறிதாயினும்
    உம்மை விட்டு விடுமோ?
    பொன்னேசுவே உமை முற்றுமாய்
    பெறாதிருந்திடுமோ?

3. தள்ளாடும் என் கையோடும்மைத்
    தாவிப் பற்றுறேனே
    வள்ள லும தன்பைப் பெற்று
    வாழ்வேன் நிதந்தானே!

4. நிச்சயமாய் இயேசு உம்மை
    நிதமும் விடமாட்டேன்;
    அச்சமில்லை என் நங்கூரம்
    அசையாதுமில் தொடுத்தேன்!
                                                         K.S. Abraham

No comments:

Post a Comment