Monday, November 21, 2011

பாடல் 217: இரட்சகா! உம்மை நான்


    பல்லவி

    இரட்சகா! உம்மை நான் பின் செல்லுவேனே,
    எத்தனை பாடுகள் பட்டீர் எனக்காய்!

    சரணங்கள்

1. சாத்தான் தன் தந்திர வலை வீசினாலும்
    உம் பலத்தாலே நான் தப்பிச் செல்வேனே - இரட்சகா

2. உலகம் தன் சிற்றின்ப ஆசை காட்டிடினும்
    எல்லாம் அற்பக்குப்பை என்றுதைப்பேனே - இரட்சகா

3. பெற்றார் உற்றார் வந்து உரிமை செய்தாலும்
    நீரே போதும் என்று சொல்லி நிற்பேனே - இரட்சகா

4. பகைவர் கூடி என்னைச் சிறையில் வைத்தாலும்
    இரட்சகா! அங்கும்மைப் பிரஸ்தாபிப்பேனே - இரட்சகா

5. எனக்காக வேதனைப்பட்ட என் நாதா;
    உமக்கென்றுழைத்து மரிக்க அருளேன் - இரட்சகா

6. உமக்காக என்னைக் கல்லெறிந்து கொன்றாலும்
    ஸ்தேவான் போல் மரிக்கக் கிருபை கூர் ஐயா - இரட்சகா

7. பாவிகளை உந்தன் பதம் சேர்க்கவே நான்
    ஆசையாய் யுத்தத்தில் சாக அருளேன் - இரட்சகா

No comments:

Post a Comment