Sunday, November 27, 2011

பாடல் 176: வாரும் சிலுவையடியிலே


    இராகம்: நாதநாமக்கிரியை தாளம்: ஆதி

    பல்லவி

    வாரும் சிலுவையடியிலே - வந்தண்ணலேசை
    பாரும் துயர் நீங்கிடவே

    அனுபல்லவி

    பூரண இரட்சையடைந்து புண்ணியன் கிருபை பெற்று
    தாரணியிலும் மகிழ்ந்து வாழ அவரில் ஜீவித்து 

    சரணங்கள்

1. இம்மைச்செல்வம் அற்பமென்றெண்ணி - அவர் விலாவில்
    விம்மிப்பாயும் இரத்தத்தில் மூழ்கி
    செம்மையாய்க் கழுவப்பட்டு சீர்முழு இரட்சையைப் பெற்று
    உண்மையா யவருந்தனின் உள்ளத்தில் வாழ்ந்திட வென்று - வாரும்
   
2. ஜீவ ஊற்றில் வந்து மூழ்கிடும் - அப்போதும் உள்ளம்
    பாவ மற்று சுத்தி பெற்றிடும்
    தேவசுதன் திரு இரத்தம் மூழ்க முழு இரட்சைவரும்
    ஆவலோடு அவரை நீர் தேடி இதோ வந்துவிடும்! - வாரும்

3. சேரும் இரட்சண்யப் படையிலே - தைரிய மடைய
    வாரும் யுத்த முன்னணியிலே!
    ஜீவித்திடும் வெளிச்சத்தில் சுத்தி நீர் ஆசிப்பீராகில்
    கூவியவரைக் கெஞ்சும் பூர்ண இரட்சை வேண்டுமாகில் - வாரும்

4. பரிசுத்தம் வேண்டுமாகில் நீர் - பாரச் சிலுவை
    பற்றி அதை விட்டிடாதேயும்
    பூலோக ஐசுவரியம் பூவைப்போல் வாடிடுமென்று
    மேலவன் பாதத்தைத் தேடும்; மேன்மை சுத்திதனை நாடும்! - வாரும்

No comments:

Post a Comment