Tuesday, November 22, 2011

பாடல் 215: பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து


    இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ரூபகம்

    பல்லவி

    பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு - நான்
    தரித்திருக்கும்படிக்குத் தயவோடு

    அனுபல்லவி

    பரத்தில் நான் ராஜனாய்ப் பயணஞ் செய்திடவும்
    பரிசுத்த ஊழியப் பணி புரிந்திடவும்!

    சரணங்கள்

1. என்மே லவர் கூர்ந்திட்டார் இனிதன்பு - நான்
    பொன்னேசுவில் கொண்டிட்டேன் மெய்யன்பு!
    மன்னனார் போக்கினா ரென் பாவத்துன்பு!
    மாசற என்னுள்ளம் ஆக்கினார் நம்பு! - பிரித்து

2. கண்டேன் நான் அவர் நன்மை கணக்கில்லை - அதை
    விண்டா லதிசயம் இது உண்மை;
    கொண்டா ரென் னுள்ளத்தைக் கோமான் தன் பதியாய்
    என்றும் நாங்களொன்றாயிருந்திட இசைவாய் - பிரித்து

3. துட்டப் பேயைத் துரத்தித் துணை செய்வார்!
    மட்டற்ற விடுதலை பெறச் செய்வார்!
    கிட்டிவரும் அம்பையும் தட்டி விடுவார்!
    கீழே விழா தென்னைத் தாங்கியும் கொள்வார் - பிரித்து

No comments:

Post a Comment