Thursday, November 17, 2011

பாடல் 233: என் மீட்பர் உயிரோடிருக்கையிலே


    இராகம்: இந்துஸ்தானி தாளம்: ஆதி

    பல்லவி

    என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
    கென்ன குறை உண்டு நீ சொல் மனமே!
   
    சரணங்கள்

1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
    என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
    விண்ணுல குயர்ந்தோர் உன்னதம் சிறந்தோர்
    மித்திரனே சுக பத்திரமருளும்! - என்

2. பாவமோ மரணமோ நரகமோ பேயோ,
    பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர்
    சாபமே தீர்த்தோர் சற்குரு நாதன்
    சஞ்சல மினியேன்? நெஞ்சமே மகிழாய்! - என்

3. ஆசி செய்திடுவார் அருள் மிக அளிப்பார்
    அம்பரந்தனில் எனக்காய் ஜெபிப்பார்,
    மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்
    மோட்ச வழி சத்திய வாசல் உயிரெனும்! - என்

4. கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
    கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
    பாவ மன்னிப்பளிப்பார் பாக்கியம் கொடுப்பார்
    பரம பதவியினுள் எந்தனை எடுப்பார்- ன்
                                                                              எழுதியவர்: ஞா. சாமுவேல்

No comments:

Post a Comment