Wednesday, December 8, 2010

பாடல் 462: ஏகப்பரம ஒளி

     இராகம்: பைரவி தாளம்: ரூபகம்
    'இயேசுவே செங்கரும்பே' என்ற மெட்டு

    பல்லவி

    ஏகப்பரம ஒளி - எனும் பாலகனாய்த்
    தேவன் பாரினில் பிறந்தார்

    அனுபல்லவி

    நீச மகாஜன பாவப்பரிகார
    நேச மனோகரனான மரிசுதன்

    சரணங்கள்

1. பார்தனில் தாவிய பாவந் தொலைக்கவே
    பூர்வத்திலே பிதா நேமப்படி தீர்க்கர்
    ஓர் அற்புதன் எழும்பிடுவா ரென
    சீர் பெறவோதிய செய்தி விளங்கிட - ஏக

2. ஆயர்கள் இராக்காலம் ஆட்டு மந்தை காக்க
    அந்தரத்தில் தேவதூதர் மொழி கேட்க
    தேவலோகம் களிகூர்ந்து பாடல் பாட
    தேவன் பெத்லேம் ஆவின் கூடத்தேழையாக - ஏக

3. விண்ணினில் ஜோதிகள் எண்ணிலா சேனைகள்
    மண்ணினில் ஜாதி உயிர்த்திரள் போற்றிட
    கண்ணினில் கண்ணொளியாகும் குமாரனாய்
    அண்ணலாம் இயேசு அருணோதயமான - ஏக

4. அந்தரத்தில் தேவசுந்தர பாலகன்
    எந்தவுலகுக்கும் ஏற்ற நல் இரட்சகன்
    வந்தவதரித்த வானவராம் நேசன்
    சொந்தம் நம்மோடினின்றும் என்றும் சகவாசன் - ஏக

No comments:

Post a Comment