Tuesday, December 7, 2010

பாடல் 469: ஒப்பில்லா - திரு இரா

    Silent night, holy night - ESB 89
                           (Tune 800)

1. ஒப்பில்லா - திரு இரா
    இதில் தான் - மாபிதா
    ஏகமைந்தனை - லோகத்துக்கு
    மீட்பராக அனுப்பினது
    அன்பின் அதிசயமாம்

2. ஒப்பில்லா - திரு இரா
    யாவையும் - ஆளும் மா
    தெய்வமைந்தனார் பாவிகளை
    மீட்டு விண்ணுலகுயர்த்த தம்மை
    எத்தனை தாழ்த்துகிறார்

3. ஒப்பில்லா - திரு இரா
    ஜென்மித்தார் - மேசியா
    தெய்வ தூதரின் சேனைகளை
    நாமும் சேர்ந்து - பராபரனை
    பூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம்
                                                               Joseph Mohr

No comments:

Post a Comment