Thursday, December 9, 2010

பாடல் 457: உதித்ததே பாராய்

    இராகம்: தனப்பிரியா தாளம்: ரூபகம்

    பல்லவி

    உதித்ததே பாராய் - வெளிச்சந்தான்
    உலகத்தின் ஒளியாய்

    அனுபல்லவி

    உதித்ததே உலகினி லோப்பற்ற பேரொளி,
    அதிசயப் பிரபையை அற்புதமாய் வீசி

    சரணங்கள்

1. இதயத்தி லிருண்டு - குளிர் மிகக்
    கதித்துமே மருண்டு,
    மதிகெட்டு வழி விட்டு மருளுக்குள்ளகப்பட்டு 
    கதியற்ற பாவிகட்குக் கதிர்விட்டு சுடர் விட்டு -  உதித்ததே

2. பரனடி மறந்து - தமக்குள்
    உரிமையைத் துறந்து,
    மரண இருளில் மயங்கித் திரிவோர்க்கு
    அருணோதயம் போலனாதிச் சுடரொளி -  உதித்ததே

3. திரிவினை தீர - இயேசையன்
    திருப் பாலனாக
    மருள கன்றிருள் மாய மன்னன் தாவீ திறை
    வரிசையின் வேர், விடிவெள்ளி நட்சத்திரம் -  உதித்ததே  

4. அகம் பிணி யுடைய ஆத்துமாக்க
    ளாரோக்ய மடைய 
    தகனிக்கு மக்கினி தகதக வென்று தன்
    ததியோடு கதிர் வீசியே நீதிச் சூரியன் -  உதித்ததே

5. வெளிச்சத்தில் நடப்பா ரிடறியே,
    விழுந்துமே போகார்!
    வளரும் பக்தி, விசுவாசம், பரிசுத்தம்,
    அளவற்ற கிறிஸ்தேசு அண்ணலா மாதித்தன் -  உதித்ததே

No comments:

Post a Comment