Wednesday, December 1, 2010

பாடல் 484: மண வாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

   "ஆத்துமமே" என்ற மெட்டு

    பல்லவி

    மண வாழ்வு - புவி - வாழ்வினில் வாழ்வு
    மங்கள வாழ்வு - வாழ்வினில் வாழ்வு
    மண வாழ்வு - புவி - வாழ்வினில் வாழ்வு
    மருவிய சோபன சுபவாழ்வு

1. துணைபிரியாது - தோகை இம்மாது
    மணவாளன் மணவாட்டி இதுபோது
    மறைமுறையோது வசனம் விடாது
    வந்தனரு மதருள் பெறலேது - (நல்ல) மண வாழ்வு

2. ஜீவ தயாபரா - சிருஷ்டியதிகாரா
    தெய்வீக மாவணமலங்காரா
    தேவகுமாரா திருவெல்லையூரா
    சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரோ - (நல்ல) மண வாழ்வு

3. குடித்தன வீரம் - குணமுள்ள தாரம்
    கொடுத்துக் கொண்டால் அது சமுசாரம்
    அடக்க மாசாரம், அன்பு உதாரம்
    அம்புவிதனில், மனைக்கலங்காரம் - (நல்ல) மண வாழ்வு
                                                                                    S.S. Jeremiah

No comments:

Post a Comment