Thursday, December 9, 2010

பாடல் 460: அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்

    இராகம்: தால்லி தாளம்: ஆதி

    பல்லவி

    அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்
    தேவ பாலனை

    அனுபல்லவி

    தாவீதின் ஊரதில் ஜோதியாய் உதித்த - எம்
    மேசியா இயேசுவைப் போற்றி

    சரணங்கள்

1. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் பாடி
    ஆர்ப்பரிப்போமின்று கூடி,
    தீன பந்தா மெம் திவ்விய னேசுவை
    தினமதில் துதிப்போம் கொண்டாடி - அக

2. தேவதிருச் சுதன் இயேசு நமக்காய்
    ஈன வுருவ மெடுத்தார்
    ஏவையின் பாவ வேரையறுத் தெமக்
    கினிய இரட்சையுமளித்தார் - அக

3. பூவுலகோருக்குப் புண்ணியனிவரே!
    மேலுலகோருக்கும் கோனே!
    பாவிகள் மோட்சப் பதவியடைந்திட
    தாவியிப் புவியில் வந்தாரே - அக
                                          P. நல்லதம்பி

2 comments:

  1. மிகவும் அற்புதமான முயற்சி....
    வாழ்த்துக்கள்

    ReplyDelete