Tuesday, December 14, 2010

பாடல் 445: சரணம் சருவேசா!

    பல்லவி

    சரணம் சருவேசா! தயை கூரும் அதிநேசா!

    அனுபல்லவி

    கருணை புரிந்தாள் இப்புது வருடமே முழுவதும்
                                                                  கடையற

1. இன்றளவில் காத்தாய் வெகு இரக்கமுறப் பார்த்தாய்
    நன்மை மிகவே தந்தாய் நவ வருடமிது ஈந்தாய் - சரணம்

2. எத்தனை துன்பங்கள் வந்ததனைத்தையும் அணுகா,
    சித்தம் வைத்துக் காத்த தேவா திருவடி சரணம் - சரணம்

3. இந்த ஆண்டில் இடர்க்கு எம்மை என்றும் தப்புவிப்பாய்
    உந்தனாளுகை நீங்கா தெந்தனை யாண்டிடும் அன்பாய் - சரணம்

4. பாவஞ் சிதைந் தொழிய எங்கும் சாப மகன்றழிய
    தேவ கோபம் தீர்த்திட துன்னிய கொள்ளை நோய் நைந்திட - சரணம்

5. தீய சாத்தான் சோதனையில் சிக்கி சீர்கெடாமல்
    தூய ஆவியால் புதிய ஜீவியஞ் செய்யவே துணைபுரி - சரணம்

6. இந்த வருடம் செழிக்க எவரும் உனில் களிக்க
    தந்தோம் அடியோர் துதிமிக தயவுடனாசீர்வதித்திடும் - சரணம்

No comments:

Post a Comment