Tuesday, December 7, 2010

பாடல் 466: பாலன் ஜெனனமானார்

    ('பூலோக ஜாதனாயி' என்ற மலையாள மெட்டு)

    இராகம்: இந்துமந்தாரி தாளம்: ஆதி

    பல்லவி

    பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும் ஊரிலே
    ஆச்சர்ய தெய்வ ஜெனனம்! அனைவரும் போற்றும் ஜெனனம்!

    சரணங்கள்

1. கன்னி மேரி மடியினில் கன்னம் குழியச் சிரிக்கிறார்
    சின்ன இயேசு தம்பிரான்!
    சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடத்துமே
    மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! - பாலன்

2. வானில் பாடல் தொனிக்குது; வீணை கானம் இசையுது
    வையகம் முழங்குது!
    சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடத்துமே
    மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! - பாலன்

3. உன்னதத்தில் மகிமையே! பூமியில் சமாதானமே!
    மனுஷர் மேலே பிரியமே!
    சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடத்துமே
    மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! - பாலன்

4. மேய்ப்பர் பாடல் கேட்கிறார்; முன்னணையைக் கிட்டுறார்
    உண்மை செய்தி அறிகிறார்!
    சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடத்துமே
    மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! - பாலன்

5. கிழக்கு ராஜநட்சத்திரம் கணித்துப்பார்த்த சாஸ்திரிகள்
    துணிந்து வந்து பணிகிறார்!
    சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடத்துமே
    மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! - பாலன்

6. செய்தி விரைவில் பரவுது! சர்வலோகம் வியக்குது!
    சத்தியம்! இது சத்தியம்!!!
    சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடத்துமே
    மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! - பாலன்

7. இயேசுநாதர் பிறப்பினால் பிசாசின் சிரசு நசுங்கவே
    மோட்ச வாசல் திறந்தது!
    சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடத்துமே
    மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! - பாலன்
                                                    Suviseshamuthu A. Paul

No comments:

Post a Comment