Friday, December 3, 2010

பாடல் 476: ஓசன்னா பாடுவோம்

    இராகம்: இந்துமாரி தாளம்: ஆதி

    பல்லவி

    ஓசன்னா பாடுவோம், இயேசுவின் தாசரே
    தாவீதின் குமாரனுக்கு உன்னதத்தில் ஓசன்னா!

    சரணங்கள்

1. சின்னமறி மேலே ஏறி அன்பர் பவனி போனார்
    இன்னுமவர் என்னகத்தில் வந்து அரசாளுவார் - ஓசன்னா

2. முன்னும் பின்னும் சாலேம் பாலர் இன்பமாய் பாடினார்,
    அன்றுபோல இன்று நாமும் அவர் துதி பாடுவோம் - ஓசன்னா

3. குருத்தோலை ஞாயிறில் நாம் குருபாதம் பணிவோம்
    திரு அருள் ஆவிபெற்று திரியேகரைப் போற்றுவோம் - ஓசன்னா 

No comments:

Post a Comment