Monday, December 6, 2010

பாடல் 473: மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்

    இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ரூபகம்

    பல்லவி

    மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்
    மன்னன் கிறிஸ்தேசு

    அனுபல்லவி

    மரித்த மூன்றாம் தினத்திலே - முன்
    மொழிந்தபடி எழுந்து

    சரணங்கள்

1. மூர்க்கமாய் சமாதி காத்ததை
    மூடர் முத்ரை சூட;
    தீர்க்கமா யோர் தூதனைக் கல்
    திறக்க மறை சிறக்க -  மரணத்தின்

2. நாரியர் அதி காலைக் கல்லறை
    நாட வந்து தேட
    வீரியமாய் வேதாளத்தை
    வென்று ஜெயங்கொண்டு -  மரணத்தின்

3. சீமானோடு யோவானும் ஓடியே
    சேர்ந்து உள்ளே புகுந்து
    சீலை தவிர சடத்தை காணா
    திரும்ப மரி புலம்ப -  மரணத்தின்

4. எக்காளம் கடை தொனிக்கவே உல
    கெல்லோரும் உடன் உயிர்க்கவே
    எக்காலத்திலும் ஏற்ற சாட்சியாய்
    இருக்க ஜீவன் அளிக்க -  மரணத்தின்

No comments:

Post a Comment