Sunday, December 5, 2010

பாடல் 474: என்ன காட்சி! என்ன சாட்சி!

    இராகம்: தன்யாசி தாளம்: ஆதி

    பல்லவி

    என்ன காட்சி! என்ன சாட்சி!
    இயேசு கல்லறையை விட்டெழுந்த மாட்சி!
   
    சரணங்கள்

1. வாரத்தின் முதல் நாள் மரி காலையிலெழுந்தனள்
    நேரே கல்லறைக்குச் சென்று நின்றுமே கலங்கினள் - என்ன

2. கல்லறை மூடிய கல்லைப் புரட்டியிருந்ததும்
    கர்த்தனாரின் தூதனங்கு காட்சி ஈந்திருந்தும் - என்ன

3. மரித்தோரிடையில் இயேசு மன்னனில்லை என்றதும்
    உயிர்த் தெழுந்திட்டாரிது உண்மை என்று சொன்னதும் - என்ன

4. நம்பாமல் மரியா ளங்கு நாணி நின்றழுததும்
    பின்பாக இயேசுவே நின்று பேர் சொல்லி யழைத்ததும் - என்ன

5. தொனியறிந்து மரியாள் தொழுது விழுந்ததும்
    கனிந்த வாக்கோடே இயேசு காட்சி யவட்கீந்ததும் - என்ன

6. நானுயிர்த்தே னென்ற இந்த நல்ல தூதைக் கொண்டு நீ
    தானே சகோதரர்க்கு சாற்று என்று சொன்னதும் - என்ன

7. உயிர்த்தெழுந்த இயேசுவிடம் ஒதுங்கு மெப் பாவிக்கும்
    தவித்து நிற்கும் அந்நாதன் தாங்கி ரட்சை ஈவாரே - என்ன

No comments:

Post a Comment