Thursday, December 2, 2010

பாடல் 478: ஞானக் குரு பரனே

    'இயேசுவே செங்கரும்பே' என்ற மெட்டு தாளம்: ஆதி
 
    பல்லவி

    ஞானக் குரு பரனே - இந்த
    நானிலத்தில் கலியாணம் வகுத்த மெய் - ஞான

    அனுசரணங்கள்

1. கானாவிலே யிது போன்ற மணத்தில்
    கர்த்த னெழுந்ததுபோல இத்தினத்தில்;
    வானா! நீர் வாரு மிவ் வானந்தக் கூட்டத்தில்
    வந்துன் கிருபையைத் தந்து முடிசூட்டும் - ஞான

2. இரஷகனே யிப்போ கண்ட நல் ஐக்யம்
    எந்நாளு மோங்கக் கிருபை செய் ஸ்லாக்யம்;
    உச்சரிக்கைப்படி வாழ்ந்திடும் பாக்கியம்
    முத்தரித்தே யிதைச் சுத்திகரித்திடும் - ஞான

3. இந்நிமிஷந் தொட்டு இந்த நல் நண்பரின்
    இல்லற நாட்கள் எவ்வளவாயினும்;
    அந்நாட்களிலிவர் அருமைப் பிதாவின்
    விண்ணுலகத்தையே கண்ணோக்கி வாழ - ஞான

No comments:

Post a Comment