Thursday, December 2, 2010

பாடல் 479: கர்த்தாவே உன்னடியார்

    தாளம்: ஆதி

    சரணங்கள்

1. கர்த்தாவே உன்னடியார் காத்திருந்து
    கண்ணுயர்த்திடும் வேளை;
    உன்னருள் உன்னத ஆசீர்வாதத்தை
    இம்மணர்க் கீந்தருள்வாய்;

2. ஞான மணவாளனே இன்றிவர்க்குன்
    தானமளித்திடுவாய்;
    வானுலகின் நன்மையால் திருப்தியாக்கி;
    மானில நண்பனாவாய்,

3. பாரதில் செல்லும்போது தாசரிவர்
    சோர்பின்றியே உமக்காய்,
    சீறிடும் சாத்தானை ஜெயித்து ஜீவிக்க,
    பார்த்திபா! பலமீவாய்

4. என்னென்ன நேரிட்டாலும் அன்பரிவர்
    தன்னய மற்றவராய்;
    மன்னவா! உம்மில் தம் வாக்குகள் காத்திட
    உன்னரு வீந்திடுவாய்
                                                        S. பாக்கியநாதன்

No comments:

Post a Comment