'வரு பாவியை ஒருபோதிலும்' என்ற மெட்டு
பல்லவி
குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, இயேசு தேவே
மணம் இங்கதி வளமாய் உற வருவீர் மேசியாவே
சரணங்கள்
1. மன்றல் செய்து மனை புது மண
வாளனோ டவ னேரும்
தன் துணையான மங்கையும் இங்கே
தழைக்க அருள் தாரும் - குணம்
2. ஆதி மானிடர்க்கான ஓர் துணை
அன்றமைத்த நற்போதனை
தீதற இணையாம் இவர்க் கருள்
செய்குவீர் எங்கள் நாதனே - குணம்
3. தொன்று கானாவின் மன்றல் ஓங்கிடத்
தோன்றிய தயாபரனே,
இன்று மன்றல் சிறந்திட அருள்
ஈந்திடும் க்ருபா கரனே - குணம்
4. பண்பதில் லவலேசமும் குறை
பாடில்லாத தெய்வீகனே
நண்பதில் இருபேரும் வாழ்ந்திட
நண்ணும் மா திரி யேகனே - குணம்
5. உற்ற நல் உறவோடும் எங்கள்
உரிமை ஆனவர் யாரும்
பற்றதாய் உறு பக்தி யோடும்மைப்
பாட நல் மனம் தாரும் - குணம்
No comments:
Post a Comment