Tuesday, December 14, 2010

பாடல் 442: அன்பின் விதைகளை

    Snowing in the morning - ESB - 930
                      (Tune 624 Of ESB)

1. அன்பின் விதைகளை அந்தி சந்தி வேளை
    விதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே;
    அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே,
    சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே

    பல்லவி
   
    அரிக்கட்டோடே அரிக்கட்டோடே
    சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே

2. வெயில் நிழலிலும் விதைப்போமே நாமும்
    குளிர் பனி கூதல் பயப்படாமல்
    வேலையும் முடிந்து நல்ல பலன் காண்போம்,
    சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே - அரிக்கட்டோடே

3. கவலைகள் கண்ணீர் கஷ்ட நஷ்டமேனும்
    தைரியமாய் விதைப்போம் இயேசுவுக்காக;
    கண்ணீர் ஓய்ந்த பின்னர் கர்த்தர் நம்மைச் சேர்ப்பார்
    சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே - அரிக்கட்டோடே
                                                                                   Knowles Shaw

பாடல் 443: நித்தியானந்த ஜீவ ஊற்றே!

    Tune - And above the rest

1. நித்தியானந்த ஜீவ ஊற்றே!
    உந்தன் துதியைப் பாடுவோம்
    இவ்வருடப் பிறப்பிலே
    இவ் வல்லேலூயா சத்தமே!

    பல்லவி

    பாடுவேன் நான் இக்கீதத்தை
    இக்கீதத்தை இக்கீதத்தை,
    பாடுவேன் நான் இக்கீதத்தை
    இயேசு செய்வதெல்லாம் நன்மை!

2. சென்ற நாள் நீர் எம் பதவி
    இக்கட்டுத் தீங்கில் உதவி
    நாம் பெற்ற எல்லா நன்மைக்கே
    அடியார் உள்ளம் பாடுதே! - பாடுவேன்

3. யுத்தத்தில் நீரே முன் சென்று
    ஜெயித்தீர் எம்மண்டை நின்று;
    நன்றியறிதலுடனே,
    என் உள்ளம் உம்மைப் போற்றுதே! - பாடுவேன்

4. இப்போ நின் பாதம் பணிந்து
    நான் நவ பலியாய்த் தந்து;
    வருங்கால யுத்தத்திலே
    அருள் தா, கீதம் பாடவே! - பாடுவேன்

பாடல் 444: ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே!

    "அற்புதம் பாவி நான்" என்ற மெட்டு தாளம்: ஆதி

    பல்லவி

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே!
    துதிமிகு தேவா ஸ்தோத்திரமே!

    அனுபல்லவி

    நேத்திரம்போல் கடந்தாண்டிலெமை
    காத்தீர் கருணையால் நிதம் உண்மை! - ஸ்தோத்திரம்

    சரணங்கள்

1. எத்தனை ஆபத்து சோதனைகள்
    எமக்கு நேரிட்ட பல இடர்கள்
    அத்தனையும் எமை அணுகாமல்
    ஆதரித்தீர் பிழை நினையாமல்! -  ஸ்தோத்திரம்

2. ஆனந்தத்துடன் புது வருடம்
    ஆரம்பித்தோம் ஆவலுடன்
    நானிலம் புரக்க அவதரித்த
    நாதனைப் புகழ்வோம் நன்றியுடன் -  ஸ்தோத்திரம்

3. இப்புது ஆண்டினில் அடியார்க்கு
    இகபர நன்மைகள் அனுக்கிரகித்து;
    அப்பனே கிருபையின் செட்டையினுள்
    அற்புதமா யணைத் தாதரிப்பாய் -  ஸ்தோத்திரம்

4. வெற்றியாய் யுத்தத்தில் முன்செல்ல
    வெகுவாய் ஆத்ம ஜெயங்கள் கொள்ள;
    பற்றியே நடந்துனின் பாதை செல்ல
    பகருவாய் உன்னத வரங்கள் செல்ல -  ஸ்தோத்திரம்

5. தேசங்கள் வாழியே தீமையற
    தேவனைத் தேடியே தோஷமற,
    ஓசன்னா பாடவே ஓகையுற
    உய்யவே அருள்வாய் ஊழியற -  ஸ்தோத்திரம்

பாடல் 445: சரணம் சருவேசா!

    பல்லவி

    சரணம் சருவேசா! தயை கூரும் அதிநேசா!

    அனுபல்லவி

    கருணை புரிந்தாள் இப்புது வருடமே முழுவதும்
                                                                  கடையற

1. இன்றளவில் காத்தாய் வெகு இரக்கமுறப் பார்த்தாய்
    நன்மை மிகவே தந்தாய் நவ வருடமிது ஈந்தாய் - சரணம்

2. எத்தனை துன்பங்கள் வந்ததனைத்தையும் அணுகா,
    சித்தம் வைத்துக் காத்த தேவா திருவடி சரணம் - சரணம்

3. இந்த ஆண்டில் இடர்க்கு எம்மை என்றும் தப்புவிப்பாய்
    உந்தனாளுகை நீங்கா தெந்தனை யாண்டிடும் அன்பாய் - சரணம்

4. பாவஞ் சிதைந் தொழிய எங்கும் சாப மகன்றழிய
    தேவ கோபம் தீர்த்திட துன்னிய கொள்ளை நோய் நைந்திட - சரணம்

5. தீய சாத்தான் சோதனையில் சிக்கி சீர்கெடாமல்
    தூய ஆவியால் புதிய ஜீவியஞ் செய்யவே துணைபுரி - சரணம்

6. இந்த வருடம் செழிக்க எவரும் உனில் களிக்க
    தந்தோம் அடியோர் துதிமிக தயவுடனாசீர்வதித்திடும் - சரணம்

Sunday, December 12, 2010

பாடல் 446: தேவ தேவா! திரியேக தேவா!

    இராகம்: மோகனம் தாளம்: ஆதி
   
    பல்லவி

    தேவ தேவா! திரியேக தேவா!
    தோத்திரம் துதி யுமக்கு ஏற்றிடும் யோவா!

    சரணங்கள்

1. ஆவலாக எதிர் பார்த்த அடியார்
    ஆசியுறவே இந்நவ ஆண்டையளித்த - தேவ

2. சென்ற ஆண்டினில் வந்த சோதனைகளில்
    நின்று காத்தருள் புரிந்த நன்றியுணர்ந்து - தேவ

3. பஞ்சம் படைக்கும் பல கொள்ளை நோய்க்கும்
    சஞ்சலங்களின்றி சமாதானமாய்க் காத்த - தேவ 
   
4. இந்த ஆண்டினில் வரும் இடர் யாவுக்கும்
    எந்தையே எமக்கிரங்கி என்றும் ஆண்டிடும் - தேவ

5. பாவி மீளவே பிசாசு மாளவே
    பாரி லேசு நாம மெங்கும் பரம்பி வாழவே - தேவ


பாடல் 447: ஜீவிக்கிறோம் இன்னும்

    "சலாம் தோழர் சலாம்" மெட்டு

1. ஜீவிக்கிறோம் இன்னும்
    தம்மில் தம்மில் காண;
    நம்மை மீட்ட கிருபைக்காக
    புகழ் இயேசுவுக்கே

2. பூர்ண இரட்சை ஈந்து
    காத்தார் தம் பலத்தால்;
    கர்த்தர் இயேசுவின் சந்நிதி;
    நின்று துதிப்போம்

3. கடந்தோம் துயர் பல
    ஜெயித்தோம் போர் பல;
    கடந்த ஆண்டின் இடர் யாவும்
    தீர்த்திங்கு சேர்த்திட்டார்

பாடல் 448: கர்த்தாவே அடியார்க் கென்றும்

    O! God our help ESB -13
           (Tune 127 Of ESB)

1. கர்த்தாவே அடியார்க் கென்றும்
    அடைக்கலம் நீரே;
    புசலில் எம் புகலிடம்
    நித்ய வீடும் நீரே

2. சிம்மாசன நிழலின் கீழ்
    தம் தாசர் வசிப்பார்;
    உம் கரம் போதுமானதே
    எம் காவல் நிச்சயம்

3. பர்வதங்கள் தோன்றி பூமி
    உருவாகு முன்னும்
    அநாதியான தேவரீர்
    மாறாதிருப்பீரே

4. ஆயிரம் ஆண்டு உமது
    அநாதி பார்வைக்கு
    நேற்றுக் கழிந்த நாள் போலும்
    இராச்சாமம் போலுமாம்

5. காலம் வெள்ளம்போல் மாந்தரை
    வாரிக் கொண்டோடுது,
    மறந்துபோம் சொப்பனம்போல்
    மறைகிறார் மாந்தர்

6. கர்த்தாவே அடியார்க்கென்றும்
    அடைக்கலம் நீரே
    இம்மையில் நீர் என் காவலர்
    நித்திய வீடும் நீரே

Saturday, December 11, 2010

பாடல் 449: இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

    While shepherds watched their flocks by night - ESB - 93
                                (Tune - 144 of ESB)

1. இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
    தம் மந்தைக்காத்தனர்;
    கர்த்தாவின் தூதன் இறங்க
    விண் ஜோதி கண்டனர்

2. அவர்கள் அச்சம் கொள்ளவும்
    விண் தூதன் "திகில் ஏன்?
    எல்லாருக்கும் சந்தோஷமாம்
    நற் செய்தி கூறுவேன்"

3. "தாவீதின் வம்சம் ஊரிலும்
    மெய் கிறிஸ்து நாதனார்;
    பூலோகத்தாருக்கு இரட்சகர்
    இன்றைக்குப் பிறந்தார்"

4. "இதுங்கள் அடையாளமாம்
    முன்னணை மீது நீர்;
    கந்தை பொதிந்த கோலமாய்
    அப்பாலனைக் காண்பீர்"

5. என்றுரைத்தான்; அட்சணமே
    விண்ணோராம் கூட்டத்தார்
    அத்தூதனோடு தோன்றியே
    கர்த்தாவைப் போற்றினார்

6. மா உன்னதத்தில் தேவனே,
    நீர் மேன்மை அடைவீர்;
    பூமியில் சமாதானமும்
    எல்லோர்க்கும் ஈகுவீர்
                             Nahum Tate

பாடல் 450: விசுவாசிகளே!

    Oh! Come all ye faithful - ESB - 85
                (Tune - 552 of ESB)

1. விசுவாசிகளே!
    ஜெயக் கெம்பீரரே!
    வாருமிதோ பெத்லகேமுக்கு;
    மேலோக ராஜன்
    பிறந்தார் பாருங்கள்!
    வாரும் தொழுவோம், கர்த்தன் - கிறிஸ்துவை

2. கூடிப் பாடிடுங்கள்
    பாடி மகிழுங்கள்
    வான லோகத்தின் வாசிகளே!
    உன்னதனுக்கு
    மகிமை பாடுங்கள்;
    வாரும் தொழுவோம், கர்த்தன் - கிறிஸ்துவை

3. ஆம் எங்கள் நாதனே!
    இன்றுதித்த  பாலனே!
    இயேசுவே! உமக்கு மகிமை
    தேவனின் வாக்கு
    தோன்றிற்று மாம்சத்தில்;
    வாரும் தொழுவோம், கர்த்தன் - கிறிஸ்துவை
                                                        Trs. Frederick Oakeley

பாடல் 451: ராஜன் தாவீதூரிலுள்ள

    Once, in royal David's city - ESB - 87
                   (Tune 460 Of ESB)

1. ராஜன் தாவீதூரிலுள்ள
    மாட்டுக் கொட்டில் ஒன்றிலே,
    கன்னி மாதா பாலன் தன்னை
    முன்னணையில் வைத்தாரே;
    மாதா மரியம்மாள் தான்,
    பாலன் இயேசுகிறிஸ்து தான்

2. வானம் விட்டுப் பூமி வந்தார்
    மகா தேவ தேவனே,
    அவர் வீடோ மாட்டுக் கொட்டில்
    தொட்டிலோ முன்னணையே;
    ஏழையோடு ஏழையாய்
    வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்

3. ஏழையான மாதாவுக்கு
    பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
    பால்ய காலம் எல்லாம் அன்பாய்
    பெற்றோர்க்கு அடங்கினார்;
    அவர்போல் கீழ்ப்படிவோம்
    சாந்தத்தோடு நடப்போம்

4. பாலர்க் கேற்ற பாதை காட்ட
    பாலனாக வளர்ந்தார்,
    பலவீன மாந்தன் போல
    துன்பம் துக்கம் சகித்தார்;
    இன்ப துன்ப நாளிலும்
    துணை செய்வார் நமக்கும்

5. நம்மை மீட்ட நேசர் தம்மை
    கண்ணால் கண்டு களிப்போம்
    அவர் தாமே  மோட்ச லோக
    நாதர் என்று அறிவோம்;
    பாலரை அன்பாகவே
    நம்மிடத்தில் சேர்ப்பாரே.
                                           Cecil Francis Alexander 

பாடல் 452: கேள்! ஜென்மித்த ராயர்க்கே

    Hark! The herald angels sing - ESB - 82
                 (Tune: 322 of ESB)

1. கேள்! ஜென்மித்த ராயர்க்கே
    விண்ணில் துத்யம் ஏறுதே;
    அவர் பாவ நாசகர்,
    சமாதான காரணர்;
    மண்ணோர் யாரும் எழுந்து
    விண்ணோர் போல் கெம்பீரித்து;
    பெத்லேகேமில் கூடுங்கள்
    ஜென்ம செய்தி கூறுங்கள்
    கேள்! ஜென்மித்த ராயர்க்கே
    விண்ணில் துத்யம் ஏறுதே!

2. வானோர் போற்றும் க்றிஸ்துவே!
    லோகம் ஆளும் நாதரே;
    ஏற்ற காலம் தோன்றினீர்
    கன்னியிடம் பிறந்தீர்;
    வாழ்க நல் தேவனே!
    அருள் அவதாரமே
    நீர் இம்மானுவேல் அன்பாய்
    பாரில் வந்தீர் மாந்தராய்
    கேள்! ஜென்மித்த ராயர்க்கே
    விண்ணில் துத்யம் ஏறுதே!   

3. வாழ்க சாந்த பிரபுவே!
    வாழ்க நீதி சூரியனே,
    மீட்பராக வந்தவர்,
    ஒளி ஜீவன் தந்தவர்,
    மகிமையை வெறுத்து,
    ஏழைக்கோலம் எடுத்து,
    சாவை வெல்லப் பிறந்தீர்
    மறுஜென்மம் அளித்தீர்,
    கேள்! ஜென்மித்த ராயர்க்கே
    விண்ணில் துத்யம் ஏறுதே!   
                                                    Charles Wesley

பாடல் 453: தேவன் மனிதனாய் ஆகினார்

    Tune: 321 of ESB

    சரணங்கள்

1. தேவன் மனிதனாய் ஆகினார்
    தீயோர் பிணையாய் பூ மேவினார்;
    தேவலோகம் களிகூருதே
    தேவ குமாரனைப் போற்றுதே

    பல்லவி

    போற்றுவோம் போற்றுவோம்
    புண்ணிய நாதன் இயேசுவையே
   
2. காலம் நிறைவேறினபோது
    கன்னி கற்பத்தி லுற்பவித்து;
    தாலம் புரக்கப் பெத்லகேமில்
    இயேசு பிறந்தார் சந்தோஷமே - போற்றுவோம்

3. கூளிச் சிரசை நசுக்கவும்
    கூறிய சாப மளிக்கவும்
    வேதியர் மா மறை ஓதினார்,
    வேதனும் பாலகனாயினார் - போற்றுவோம்

4. மேய்ப்பர்க்கு நற்செய்தி கிட்டுது,
    மேலோக சேனைகள் பாடுது;
    மாட்டிடை மன்னன் துயில்கிறார்
    வானோர் வியந்துற்றுப் பார்க்கிறார் - போற்றுவோம்

5. ஞானிகள் மாளிகை தேடினார்,
    நாதன் ஆவின் குடில் நாடினார்;
    ஆயர் புல்லணை தரிசித்தார்,
    ஆனந்தித்துப் பிரஸ்தாபித்தார் - போற்றுவோம்

Friday, December 10, 2010

பாடல் 454: ஆர் இவர் ஆராரோ

    இராகம்: காம்பேறி தாளம்: ஆதி

    பல்லவி

    ஆர் இவர் ஆராரோ - இந்த - அவனியோர் மாதிடமே
    ஆனடை குடிலிடை மோனமா யுதித்த இவ்வற்புத பாலகனார்

    சரணங்கள்

1. மேசியா இவர்தானோ? நம்மை மேய்த்திடும் நரர் கோனோ?
    ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
                                                                           மனசானோர் - ஆர்

2. பட்டத்து துரைமகனோ நம்மைப் பண்புடன் ஆள்பவனோ?
    கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்
                                                                           தாயகனோ? - ஆர்

3. ஜீவனின் அப்பமோதான் தாகம் தீர்த்திடும் பானமோ தான்?
    ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கலமானவர்                 
                                                                       இவர்தானோ? - ஆர்
                                                                                        V. மாசிலாமணி

Thursday, December 9, 2010

பாடல் 455: மன்னுயிரை மீட்கப் புவி

    இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி

    சரணங்கள்

1. மன்னுயிரை மீட்கப் புவி தன்னிலெழ  உன்னியநல்
    புண்ணிய பரன் செயலை என்னென்று புகழ்ந்திடுவேன்  

2. வானாதி வானங்கொள்ளா மகிமைப் பராபரனார்
    மாது மரிவயிற்றினில் மனுவுருவானதென்ன?

3. சராசரம் படைத்த சர்வ வல்ல தேவனுக்கு
    தங்குதற்கு இடமில்லையோ? தாபரிக்க வீடில்லையோ?

4. சேனைத் தூதர்கள் கூட சிறப்புடன் கவிபாட
    கானகக் கோனார் தேட கர்த்தரானாரோ நீட?

5. தூய படைகள் கோடி சூழ்ந்திலங்கும் பரனே
    பாயும் மாடுகளாமோ பக்கத்துணையாவது?  

6 . கர்த்தத்துவங்கள் தாங்கும் காருண்ய பாக்கியமே 
     சுற்றி வைக்கப் பழந்துணியோ! தூங்கிடவும் புல்லணையோ?  

7. பண்டு தீர்க்கர்கள் முந்து பகர்ந்தபடியே வந்து
    சொந்தஜனம் இஸ்ரவேலின் சூரியனானீரோ?    

8. சீனாய்மலை தனிலே ஜொலித்த மகிமை எங்கே?
    தானே மாமிசத்துள்ளே தங்கிட மறைந்தீரோ?  

9. ஏதேன் வனக் காவினில் எட்டிப் பறித்த பழத்
    தீதுவினைகள் தீர ஸ்திரீயின் வித்தானீரோ?

10. பாவியான என்மேலே பட்சம் வைத்தாதரித்து
      ஜீவனைக்கொடுக்க இந்தச் சேணுலகம் பிறந்தீரோ
                                                                            A.V. ஆபேல்