பல்லவி
ஆசீர்வதியும் கர்த்தரே
ஆனந்த மிகவே
நேசா உதியும் - சுத்தரே
நித்தம் மகிமைக்கே
அனுபல்லவி
வீசிரோ வான் ஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியராம் வான் ராஜனே
ஆசீர்வதித்திடும்
சரணங்கள்
1. இம்மண வீட்டில் வாரீரோ - இயேசு ராயனே
உம்மணம் வீசச் செய்வீரோ, ஓங்கும் நேசமதுவே
இம்மணமக்கள் மீதிறங்கிடவே
இவ்விருபேரையும் காக்கவே
விண்மக்களாய் நடக்கவே
வேந்தா நடத்திடும் - வீசிரோ
2. இம்மண மக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டு பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடென் பாக்கிச் சூட்சமே
உம்மிலே தங்கி தரிக்கவே ஊக்கம் அருளுமே - வீசிரோ
3. மணமகன் ________ மங்கை _________
இன்றென்றும் ஒன்றாய் வாழ்ந்திட ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
போற்றித் துதித்தும்மை வாழ்த்திட
ஆ! தேவ கிருபை தீர்மானம் ஆம் போல அருளும் - வீசிரோ
ஆ! தேவ கிருபை தீர்மானம் ஆம் போல அருளும் - வீசிரோ
No comments:
Post a Comment