இராகம்: முகாரி தாளம்: ஆதி
பல்லவி
செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில்
1. சொல்லரிய நாதன் - சுய சோரி சிந்தி
அல்லற்படுகின்ற - ஆகுலத்தைப் பார்க்க - செல்லுவோம்
2. ஒண்முடி மன்னனார் - முண்முடி தரித்து
கண்மயங்கித் தொங்கும் - காட்சியைப் பார்க்க - செல்லுவோம்
3. மூங்கில் தடியாலே - ஓங்கியே அடிக்க
ஏங்கியே தவித்த - இயேசையனைப் பார்க்க - செல்லுவோம்
4. சத்துருவின் கையில் உற்ற ஆட்டை மீட்க
மெத்தப் பாடுபட்ட - நல்மேய்ப்பனைக் காண - செல்லுவோம்
5. கிருபாசனத்தில் - குருதியோடு சென்ற
அருமைப் பிரதான - ஆசாரியனைப் பார்க்க - செல்லுவோம்
6. பாவ வினைபோக - தேவ தயவாக
ஜீவ பலியான இயேசையனைப் பார்க்க - செல்லுவோம்
7. நித்திய சாவின் கூரை - பக்தி தேகத்தேற்று
வெற்றிபெற்ற இயேசு - மேசியாவைப் பார்க்க - செல்லுவோம்
8. கடனாளிகட்குப் - பிணையாளியாக
உடலுயி ரீந்த - உன்னதனைப் பார்க்க - செல்லுவோம்
9. பிடித்து உதைத்து - இடித்து வதைத்து
அடிக்கப்படும் நல் - ஆட்டுக்குட்டியைப் பார்க்க - செல்லுவோம்AV. ஆபேல்
No comments:
Post a Comment