Friday, December 30, 2011

பாடல் 11: வாரீரோ! செல்வோம்


    இராகம்: முகாரி தாளம்: ஆதி

    பல்லவி

    வாரீரோ! செல்வோம் - வன்குருசடியில்

    சரணங்கள்

1. என்னென்று அறியார் - மண்ணோர் செய்த பாவம்
    மன்னியப்பா வென்ற - மத்தியஸ்தனைப் பார்க்க - வாரீரோ

2. அன்று கள்ளனோடு - இன்று பரதீசில்
    வந்திடுவாய் என்ற - வல்லவனைக் காண - வாரீரோ

3. இவனுன் சேய் என்றும் - அவளுன் தாய் என்றும்
    புவிவாழ்வீரென்ற - புண்ணியனைப் பார்க்க - வாரீரோ

4. ஒன்னாரைக் கைவிட - எண்ணமில்லா நாதன்
    என்னையேன் கைவிட்டீர் - என்ற உரை கேட்க - வாரீரோ

5. தேவ கோபமூண்டு - ஏகன் நா வறண்டு
    தாகமானேன் என்று - சாற்றினதைக் கேட்க - வாரீரோ

6. ஏவை வினை தீர - தேவ நேய மேற
    யாவும் முடிந்தது - என்ற வாக்கைக் கேட்க - வாரீரோ
     
 7. அப்பன் வசந்தீறாய் - இப்போதாவி நேராய்
     ஒப்புவித்தேன் என்ற - ஓசையுரை கேட்க - வாரீரோ
                                                                                   AV. ஆபேல்

No comments:

Post a Comment