Friday, December 30, 2011

பாடல் 33: கண் விழித்து எழுந்து வா மானிடனே


    இராகம்: இந்துஸ்தான் காப்பி தாளம்: ஆதி

    கண் விழித்து எழுந்து வா மானிடனே
    கருணை நாதன் இயேசுவிடம்

    சரணங்கள்

1. நிர்ப்பந்தமான உன் நிலையுணர்ந்து
    நீச உலகத்தின் நேயம் மறந்து
    துர்க்கந்தமான துர்த்தொழில் துறந்து
    தூரதுன்மார்க்க ஜீவியம் பிரிந்து - கண் விழித்து

2. மனது போல் நடக்கத் துணியாதே
    மாய உலகின் வாழ்வை விரும்பாதே
    உனதிஷ்டம்போல் நடக்க உன்னாதே
    உல்லாச நடக்கை பொல்லாததே - கண் விழித்து

3. இருதயமுடைந்து நீ எழவேண்டும்
    இளைய மகனைப் போல் வரவேண்டும்
    பரம தகப்பன் பாதம் விழவேண்டும்
    பாவமன்னிப்பை நீ பெற வேண்டும் - கண் விழித்து

4. பேரன்புறும் பரம தந்தையவர்
    பிள்ளை உன்னைச் சதாவும் மறவாதவர்
    தூரம் பிரிந்திருக்க மனமற்றவர்
    சொந்த வீட்டில் வைத்து சூட்சிப்பவர்! - கண் விழித்து

5. அசுத்தமறக் கழுவி அலங்கரிப்பார்
    ஆடையாக நீதியுடை தரிப்பார்;
    பசிக்குப் பருக ஞானப்பால் தருவார்
    பரலோக இன்பப் பதவி சேர்ப்பார் - கண் விழித்து

No comments:

Post a Comment