Wednesday, December 28, 2011

பாடல் 70: குணப்பட இதுவே தருணமையா


    இராகம்: ஆனந்த பைரவி தாளம்: ஆதி

    பல்லவி

    குணப்பட இதுவே தருணமையா
    கோபாக்கினை நள் கொடிதாமே!

    சரணங்கள்

1. க்ஷணத்தில் இவ்வுலகமும்
   அதிலுள்ள பொருள்களும்
    தகிக்கப்படுமே படுமே படுமே! - குணப்பட

2. இன்றைக் கிருக்கு முயிர்
    நாளைக் கிருக்குமோ வென்
    றெண்ணியே மனங் கசந்து கசந்து - குணப்பட

3. ஆஸ்தி, கல்வி, உத்தியோகம்
    அதிகரித்தால் அகந்தை
    ஆகி அழிம்பு செய்யாதே, செய்யாதே - குணப்பட

4. கனி கொடா மரங்களை
    விழுத்தும் கோடரி அவர்
    கரத்திலிருக்குதையையோ ஐயையோ! - குணப்பட

5. வன்மம் பொறாமையால் வீண்
    வாதுக்கிழுத் தயலார்
    வாழ்வைக் கெடுத்தல் தர்மமோ, தர்மமோ! - குணப்ப

No comments:

Post a Comment