Friday, December 30, 2011

பாடல் 16: அளவில்லா ஆழிபோல


    Boundless as the mighty ocean – 230
                  (Tune 230 of ESB)

1. அளவில்லா ஆழிபோல 
    உலகெல்லாம் பொங்குதாம்
    அது இயேசுவின் நேசமாம்!
    அங்கலாய்க்கும் பாவியை
        அருளதாம்
    ஆக்குமாம் நல்லோனாக
    
2. ஆகாயத்தில் பிரகாசிக்கும்
    அளவில்லா ஜோதிபோல்
    இயேசு நாதர் வாக்குத்தத்தம்
    இலங்கி ஜொலிக்குது;
        எப்பாவிக்கும்
    நம்பினால் மீட்பு உண்டு

3. சுத்தாகாயம் விலையின்றி 
    நித்தம் நாம் முகரும்போல்
    அத்தனேசு அரும் பாடால்
    அளித்த இரட்சண்யத்தை
        அடைவோமே
    அசுத்தம் அகலுமே!

4. பாவக் கறையிலிருந்து
    தேவ கிருபை மீட்டிடும்
    சாகுமட்டும் அவர் பெலன்
    சுத்தமாயென்றும்  காக்கும்;
        போற்றிடுவோம்
    புண்ய நாதன் இயேசுவை
                                  J.H. Waller

No comments:

Post a Comment