Friday, December 23, 2011

பாடல் 99: அருள் நாதா - என் - குருநாதா


    இராகம்: நாதநாமக்கிரியை தாளம்: ஆதி

    பல்லவி

    அருள் நாதா - என் - குருநாதா - ஏழைக்
    கபய மிரங்கு மெந்த னரும் போதா!

    சரணங்கள்

1. பஞ்சமா பாவங்கள் பல புரிந்தேன்
    கிஞ்சித்தும் உன்னை எண்ணா தலைந்திருந்தேன்
    நெஞ்ச முருகி யுன்னை நாடி வந்தேன்
    தஞ்சம் நீ தான் எனக்கென் தாதாவே! - அருள்

2. நித்திய ஜீவனுக்கு நீயே வழி
    பக்தர்க்குப் பாரிதில் நீ தானே ஒளி
    உத்தமா எனக்கும் உன் இரட்சையளி
    சத்தியம் படைத்தே னுனக்கென்னைப் பலி - அருள்

3. நீயே எனக்கு வேண்டும் நித்திய கர்த்தா
    நீதி தவறா திரு தேவ மைந்தா
    மாய உலக மிதின் மயக்கம் வேண்டாம்
    நேயா என்னை ஏற்றிட மறுக்கவேண்டாம்! - அருள்
                                                                               K.S. Abraham

No comments:

Post a Comment