Friday, December 30, 2011

பாடல் 17: காது குளிர பாடுங்கள்


    Sing them over again to me - 258
                (Tune 867 of ESB)

1. காது குளிர பாடுங்கள் 
        கிருபா சத்தியம்;
    புத்தி தெளியக் காட்டுங்கள்
        திவ்விய வசனம்;
    வெல்க! சத்திய வேதம்
        வாழ்க நித்திய வேதம்

    பல்லவி

    அமிர்தமே! அற்புதமே!
    திவ்விய வசனம்
    அமிர்தமே! அற்புதமே!
    திவ்விய வசனம்

2. நல்ல செய்தியைக் கூறுமே
        கிருபா சத்தியம்
    பாவ நாசத்தைக் காட்டுமே
        திவ்விய வசனம்;
    வான வருஷ மாரி
        ஞான பொக்கிஷ வாரி - அமிர்தமே

3. வேத நாயகர் பொழியும்
        கிருபா சத்தியம்;
    ஜீவ மங்கல மொழியும்
        திவ்விய வசனம்
    இயேசு எந்தனைப் பாரும்
         நித்தம் எந்தனைக் காரும் - அமிர்தமே 
                                                              Philip P. Bliss

No comments:

Post a Comment