Monday, December 26, 2011

பாடல் 87: வையகந்தனை நடுத் தீர்க்கவே


    இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி

    பல்லவி

    வையகந்தனை நடுத் தீர்க்கவே இயேசு
    வல்லவர் வருகிறார் திருமறைக் கேற்க!

    அனுபல்லவி

    பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்க
    பொற்பதி தனில் பரன் சேயரைச் சேர்க்க

    சரணங்கள்

1. வானங்கள் மட மடவென் றகன்றிடவே,
    மாநிலம் எரிந்து மாய்ந்தழிந்திடவே,
    பானுடன் மதியுடு பஸ்பமாகிடவே,
    பஞ்ச பூதங்களும் வெந்துருகிடவே - வையகந்தனை

2. முக்கிய தூதனெக்காளமே தொனிக்க
    முதல் மரித்தோரெல்லாந் தாமெழுந்திருக்க,
    ஆக்ஷண முயிருளோர் மறுவுரு தரிக்க
    ஆண்டவர் வருகிறார் பக்தர்கள் களிக்க - வையகந்தனை

3. யாவரின் செய்கையும் வெளிப்படுவதற்கு
    பரத்தின் புத்தகங்களுந் திறந்தவரவர்க்கு
    பூவுலகில் யாவரும் நடந்து வந்ததற்கு
    புண்ணிய னளவுடன் பலனளிப்பதற்கு! - வையகந்தனை

4. அடைக்கலனேசுவை அண்டினோர் நாமம்
    அழிந்திடாதவர்களின் வாழ்வது க்ஷேமம்
    படைத்திடுவாய் உன்னை இது நல்ல நேரம்
    பற்றிடவா இப்போ இயேசுவின் பாதம் - வையகந்தனை

No comments:

Post a Comment