Friday, December 30, 2011

பாடல் 9: என்ன செய்குவேன்


    இராகம்கோகிலத்வனி தாளம்திரிபுடை

    பல்லவி

    என்ன செய்குவேன்!

    அனுபல்லவி

    எனக்காய் இயேசு மைந்தன்
    ஈனக் குருசில் உயிர் விட்டனர்

    சரணங்கள்

1. கண்ணினால் யான் செய்த கன்மந்தனைத் தொலைக்க
    முண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்து
    மூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர்
    பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம் - என்ன  

2. வாயால் மொழிந்த பாவ வார்த்தைகட்காய் எந்தன்
    நாயகன் கன்னந் துடிக்க தீயன் மின்னொளி  போல
    காயப்பட அடித்த காட்சியை நினைக்கையில்
    தீயாய் எரியுது தெய்வமே எனதுள்ளம் - என்ன

3. எந்தனை மீட்க நீர் இப்பாடு பட்டதால்
    இதற்கு பதில் செய்ய என்னாலேயாகாது
    சிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழு தத்தம்
    வந்தெனை ஆட்கொள்வாய், மகத்துவ மனுவேலா! - என்ன

No comments:

Post a Comment