Wednesday, December 28, 2011

பாடல் 37: பாவி வா! இயேசு பாவமன்னிப்பு ஈவார்


    இராகம்: கமாஸ் தாளம்: அடதாளசாப்பு

    பல்லவி

    பாவி வா! இயேசு பாவமன்னிப்பு ஈவார்

    சரணங்கள்

1. பாவியிற் பெரிய பாவியானாலும் - நீ
    பயப்பட வேண்டாம்
    பாவம் இரத்தாம்பரச் சிவப்பாயினும் வெண்
    பஞ்சதாயாக்கிடுவார்! - பாவி

2. வெள்ளையடித்தோர் கல்லறை போலொத்த
    வேஷம் வெகு மோசம்;
    உள்ளமுடைந்து உணர்ந்தறிக்கை செய்தால்
    உண்டு மன்னிப்புடனே! - பாவி

3. ஐயோ! நானென் செய்வேனென்று திகைத்து
    அலைந்து திரியாதே
    ஐயமில்லை அதிகமாக்கும் பாவங்களை
    ஐயனேசு உதிரம்! - பாவி

4. வருந்திப் பாரம் சுமப்போரே என்னிடம்
    வாரும் இளைப்பாறுதல்
    தருவேன் என்றுன்னை அழைக்கிறாரிது
    தருணம் தவறாமால் - பாவி

No comments:

Post a Comment