Wednesday, December 28, 2011

பாடல் 69: வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா


   இராகம்: மலையாமி தாளம்: ஆதி

   பல்லவி
   
    வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா
    காண்பதெல்லாம் அழியும்!

    சரணங்கள்

1. வானஜோதிகள் சத்தியமோ?
    வந்த மேசியா அசத்தியமோ?
    பித்தலாட்டமோ மனுஷா? - ஓ மனுஷா

2. எத்தனை காலமிருந்தாலும்
    இல்லம் விடுவது மெய்யல்லோ?
    இன்பமுக்தி தேடவேண்டாமோ? - ஓ மனுஷா

3. பக்தர்களின் சாட்சியை நீ
    நித்தம் பங்கமென் றிகழ்வாயோ?
    எத்துவாதமோ மனுஷா? - ஓ மனுஷா

4. நாதனைப் போற்றிடும் நாவினால்
    நரர் துதிகள்  பாடாதே;
    லோகத்தின் மேல் ஆசை வையாதே! - ஓ மனுஷா

5. அண்ணல் யேசுவைச் சேர்ந்திட்டால்
    அவரருளைப் பெற்றிடுவாய்;
    விண்ணில் வாழ்வும் சுகித்திடுவாய்! - ஓ மனுஷா

No comments:

Post a Comment